Monday, August 10, 2009

முடிவைத்தேடி....

ரொம்ப நாளாவே ஏதாவது எழுதி மீண்டும் வலைப்பூவில் பிரவேசிக்கலாம் என்று இருந்தாலும் நேரம் கிடைப்பது நரிக்கொம்பாவே (ஒரு வித்தியாச்த்துக்கு குதிரை நரியாக்கிட்டுது) இருந்ததாலே எழுதவே முடியல்லை. இப்ப எப்பிடியும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி எழுத வேணும் என்று தீர்மானிச்சு தான் எழுத ஆரம்பிக்கிறேன். அதுதான் தீர்மானிச்சாசில்ல எழுத ஆரம்பிக்க வேண்டியதுதானே என்று நீங்க சொல்லுறது தூரத்தில கேக்குது. சரி சரி எழுதிறன்..


இப்ப ஒன்றரை வருட காலமாவே இலங்கையின் special தேர்தல். தேர்தல் தினத்தில் தேர்தல் முடிவை அறிவிக்க நமது அலுவலகத்தில் இருந்து அரச தகவல் திணைக்களத்துக்கு போறது அடியேன்தான். ஒவ்வொரு முறையும் விதம் விதமான சுவாரஷ்யமான சம்பவங்கள் இடம்பெறுவது வழமை. இம்முறையும் அப்படியே.


இந்தமுறை (August 08) ஊவா மாகணசபை, யாழ் மாநகரசபை, வவுனியா நகரசபை என மூன்று பகுதிகளில் தேர்தல், சகல முடிவுகளும் வந்து சேர எப்படியும் அடுத்த நாள் (August 09) ஆகும் என்று நினைத்து தலைவலி, இருமல் என்று அப்பதான் ஏதாவது வந்து தொலைக்கும் என்பதால் அதுக்கான நிவாரணிகளுடன் இரவு 08 மணிக்கு தகவல் திணைக்களத்துக்கு சிங்கம் single ஆக ஆஜரானது.


அங்கே எங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட கண்ணாடிக்கூண்டுக்கு போய் நேரடி ஒலிபரப்புக்கு தேவையான ஒழுங்குகள் எல்லாம் பக்கவா இருக்கா என்று சரிபார்த்தபோது ஒரு சின்ன விஷயம் மூளையின் ஏதோவொரு மூலையில் பொறியாய் சுட்டது. அது தேர்தல் முடிவு வெளிவரும் வாசலுக்கும் எங்களுக்கு வழங்கப்பட்ட கண்ணாடிக்கூண்டுக்கும் இடையில் இருந்த அதிகதூரம் தான்.


தேர்தல் முடிவை விரைவாக முதலில் எமது நேயர்களுக்கு தர இது பெரியளவில் தடையாக அமையும் என்பதால் எமது பொறியியல் நண்பரிடம் mic மற்றும் headphone இரண்டையும் முடிவு வெளிவரும் வாசலுக்கு அருகிலேயே நீண்ட wire மூலம் இணைத்து தரும்படிகேட்டுவிட்டு, எமது நிலைய NEWS 1st மற்றும் ஏனைய ஊடகங்களிலிருந்து (தமிழ், சிங்கள) யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்று நோட்டம்விட சென்றேன். 70% தெரிந்த வழமையாக வரும் பார்த்த முகங்கள்தான். எல்லோருக்கும் ஒரு ஹாய் சொல்லிவிட்டு முக்கியமான ஒரு விஷயத்திற்காக ஒரு முக்கிய நபரைத் தேடினேன்


யார் அந்த முக்கியமானவர்?


வேற யார், இரவு முழுவதும் இலவசமாக சாப்பிடுவதற்கான token வழங்கும் புண்ணியவான் தான் அவர். ஒருவிதமாக அவரை கண்டுபிடித்து எனக்குரிய token ஐ வாங்கிக்கொண்டுபோய் இரவு சாப்பாட்டையும் yogurt ஐயும் தண்ணீர் போத்தலையும் வாங்கி பத்திரப்படுத்திவிட்டு (விடியும் வரை வேற தண்ணீர் போத்தல் தரமாட்டாங்க) ஊடகத்துறையில் பழம் தின்று கொட்டை போட்ட சிலரோடு கொஞ்ச நேரம் இன்றைய தமிழ் ஊடகத்துறை பற்றி பேசமுடிந்தது.


இரவு 10 மணி....
சக்தி FM தேர்தல் சிறப்பு நேரடி ஒலிபரப்பை கலையகத்தில் இருந்த மயூரனுடன் தொடர்புகொண்டு ஆரம்பித்துவிட்டு முதல் தேர்தல் முடிவுக்காக காத்திருந்தோம்.


முதல் முடிவு பெரும்பாலும் நள்ளிரவு 12 மணிக்கு வரும் என்று எதிர்பார்த்து MTV மற்றும் MBC இற்கு முடிவு வழங்கப்படும் இடத்தில் இருந்து மட்டையடித்துக்கொண்டு இருந்தோம். கொடுமை என்னவென்றால் வழமையாக தூக்கம் வரக்கூடதேன்று பெரிய திரையில் படம் போடுவார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் ஒரே DVD ஐயே போட்டு ஒரு விதமா தூக்கம் வரவச்சுடுவாங்க. அன்றைய தினமும் இந்த கொடுமையை அனுபவிச்சுக்கொண்டு அங்கங்கே காதில் விழுந்த A ஜோக்குகளையும் ரசித்துக்கொண்டு காத்திருந்தேன்.


நள்ளிரவு 12 மணி....
தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து ஒரு ungle வெளியில் வந்து standby (தயாராக இருக்கட்டாம்) என்று சொல்லிவிட்டு போனார். நானும் கலையகத்தில் இருப்பவர்களை தயாராகும்படி சொல்லிவிட்டு முதல் முடிவுக்காக தயாரானேன்.


தேர்தல் முடிவை வெளியில் கொண்டு வருபவரிடம் முதலில் வாங்கிக்கொண்டு (பறித்துக்கொண்டு) வந்து வாசிக்கும் எங்களிடம் தர என எமது அலுவலகத்தில் இருந்து அழைத்துப்போனவரும் தயாரானார்.


முடிவைக் கொண்டுவருவது கண்ணில்பட்டதும் கலையகத்தில் "அடி" எனக் கத்தினேன். அடுத்த கணம் தேர்தல் முடிவை அறிவிப்பதற்கான intro வை ஒலிபரப்பும் அதேவேளை தேர்தல் முடிவைக்கொண்டு வெளியில் வந்த நண்பரிடமிருந்து பறித்துக்கொண்டு வந்து எமது அலுவலக நண்பர் முடிவை கையில் தந்தார். எங்கிருந்தோ வந்த உற்சாகம் உடலில் பரவ முதல் முடிவை அறிவித்தேன்.


முதல் முடிவு மொனராகலை தபால் மூல முடிவு. அதன் பின்பு வவுனியா, யாழ்ப்பாணம் என முடிவுகள் வர ஆரம்பித்தன. எதிர்பார்த்தது என்னவோ முடிவுகள் வரத் தாமதமாகும் எனத்தான், ஆனால் நினைத்ததை விட விரைவாகவே எல்லா முடிவுகளும் வந்தன.

முடிவுகள் வர எடுக்கும் நேர இடைவெளியில், கொஞ்சம் ஜோக்ஸ், கொஞ்சம் சாப்பாடு, கொஞ்சம் அரட்டை என நேரம் நன்றாகவே கழிந்தது. ஒன்றன்பின் ஒன்றாக முடிவுகள் வழமைக்கு மாறாக விரைவாகவே வந்தன. நிறைவுநேரம் வர நானும் எனக்கு தெரிந்த கணக்கைப்போட்டு எந்தக்கட்சி எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது என அறிவித்துக்கொண்டிருக்கும் போதே இறுதிமுடிவையும் கையில் கொண்டுவந்து தந்தார்கள்.

காலை 05.20 மணி....
இறுதி முடிவு கையில்... வழமையாக மதியம் வரை செல்லும் இந்த கல்யாணம் (அதுதான் சிங்களத்தில் "maghula" என்று சொல்லுவாங்களே) இம்முறை காலை 05.20 மணிக்கே முடியும் குஷியில் தேர்தல் சாராம்சம் சொல்ல ஆரம்பித்தேன்.

காலை 05.30 மணி....
ஒரே மூச்சில் 10 நிமிடம் பேசி முடித்து "நன்றி வணக்கம்" சொன்ன அடுத்த நிமிடம் எமது பொறியியல் நண்பரிடம் " okkama ivaraai machchaan. galavanda" என்று சொல்லிய அடுத்த 15 ஆவது நிமிடம் எனது வீட்டில் .... எனது கட்டிலில் கொர்ர்ர் கொர்ர்ர்..........

1 comment:

RJ Dyena said...

மீண்டும் பதிவிட திடம் கொண்டு களத்துக்குள் புகுந்த 'சிங்கள் சிங்கமே'(அப்டி தானே சொன்னீங்க)
கர்ஜிக்கட்டும் தங்கள் தொடர் பதிவுகள்!

வாழ்த்துக்களுடன்
டயானா