Sunday, July 27, 2008

சூரிய மண்டலத்துக்கு வெளியே மேலும் ஒரு புதிய கோள்

சூரிய மண்டலத்துக்கு வெளியே மேலும் ஒரு புதிய கோளை ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். வியாழனைப் போன்ற அளவு கொண்ட இந்தப் புதிய கோள், சூரியனைவிட சற்று பெரிய நட்சத்திர குடும்பத்தைச் சேர்ந்தது. இந்தக் கோள் கடந்த ஜூலை 3-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தப் புதிய கோள் 9.2 நாள்களில் தனது நட்சத்திரத்தை சுற்றிவிடுகிறது.

சுற்று வேகமும் அதன் எடையும் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாக இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இந்த கோளுக்குரிய நட்சத்திரமும் இந்த கோளும் கிட்டத்தட்ட ஒரே வேகத்தில் சுற்றுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதிய கோள்களின் கண்டுபிடிப்பு பூமியைத் தவிர மற்றொரு கிரகத்தில் உயிரினம் வசிக்கலாம் என்ற எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.

சூரிய மண்டலத்துக்கு வெளியே உள்ள கோள்கள் குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக கோரட் என்ற செயற்கைக் கோளை ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கடந்த 2006-ம் ஆண்டு செலுத்தினர்.

இந்த செயற்கைக் கோள் 555 நாள்கள் விண்வெளியில் பயணம் செய்து இதுவரை 50 ஆயிரம் நட்சத்திரங்களைக் ஆய்வு செய்து வந்துள்ளது. இதுவரை 307 புதிய கோள்கள் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் குடும்பத்தை காப்பாற்றியது கிளி

அதிகாலை வீட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்திலிருந்து, ஒரு குடும்பத்தையே காப்பாற்றியுள்ளது, அவர்கள் வளர்த்து வந்த கிளி.

தெற்கு இங்கிலாந்தில், ஹாம்ப்ஷைரில் வசிக்கிறார் பிரான்சிஸ் ஹால். இவரது மகன்கள் டிரேவர்(40), சாம்(18) ஆகியோரும் உடன் வசிக்கின்றனர். இவர்கள் மூன்று வயது ஆப்பிரிக்க சாம்பல் நிற கிளியை வளர்த்து வருகின்றனர். இரவில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். வீட்டின் சமையலறையில், மைக்ரோ ஓவனிலிருந்து ஏற்பட்ட தீ, சமையல் அறையில் பரவியது. இதையடுத்து சாம் பெயரையும், பிரான்சிஸ் பெயரையும் அழைத்து கிளி கத்தியது. தீ பரவி, ஹாலுக்கும் வந்ததை அடுத்து, கிளியின் கூச்சல் பெரிதும் அதிகமானது. கிளி அழைப்பதை உணர்ந்து விழித்து பார்த்தபோது தான் வீடு தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது, மூவருக்கும் தெரியவந்தது. இதையடுத்து, கிளியுடன் மூவரும் உயிர் தப்பினர்.

"எங்கள் கிளி, குடும்பத்தாரின் உயிரை காப்பாற்றியுள்ளது. சரியான நேரத்தில் நாங்கள் விழித்திருக்கா விட்டால், உயிருடன் எரிந்திருப்போம். நாங்கள் வீட்டைவிட்டு வெளியேறியதும், ஜன்னல் வெடித்துச் சிதறியது; வீடு முழுவதும் தீ பரவி விட்டது' என்று திகிலுடன் விவரித்தார் சாம்.

Friday, July 25, 2008

புகையிலையில் இருந்து புற்றுநோய்க்கு நிவாரணி

புற்றுநோய்க்கு காரணமாக இருக்கின்ற புகையிலையில் இருந்து கூட குறிப்பிட்ட வகை புற்றுநோய் ஒன்றுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கலாம் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் நடத்தியுள்ள ஆய்வில் இருந்து கண்டறிந்துள்ளனர்.

புகையிலையில் கண்டறியப்பட்டுள்ள குறிப்பிட்ட ஒரு வகை இரசாயனத்தைக் கொண்டு குருதிப் புற்றுநோய் வடிவம் ஒன்றுக்கு (follicular B-cell lymphoma) (இது Non-Hodgkin lymphoma வகைகளில் ஒன்று) எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் தோற்றுவிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் இனங்கண்டுள்ளனர்.

எனினும் இந்த ஆய்வு இப்போ ஆரம்பப் படிநிலையிலேயே இருக்கின்றது. மேலும் பல நிலை ஆய்வுகள் இது தொடர்பில் தொடரப்பட வேண்டி இருக்கிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே ஆண்களை அதிகம் தாக்கும் புரஸ்ரேட் புற்றுநோய்க்கு (Prostate cancer ) எதிராக Abiraterone எனும் மருந்தை பாவனைக்கு அனுமதிப்பது குறித்து இறுதிக் கட்ட சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இந்த மருந்து குறிப்பிட்ட புற்றுநோயை உருவாக்கத் தூண்டும் ஓமோனை நிரோதித்து புற்றுநோய்த் தாக்கத்தை தடுக்க உதவுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மருந்து இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் மாத்திரை வடிவில் மருத்துவ சந்தையில் கிடைக்க இருக்கிறது.!

Tuesday, July 22, 2008

மலேரியாவுக்கு எதிர்ப்பைக் காட்டும் மரபணு எயிட்ஸை ஊக்குவிக்கும் அவலம்.

மலேரியா தாக்கத்தை அதிகளவில் எதிர்கொள்ளும் சூழலைச் சந்திக்கும் ஆபிரிக்கக் கண்டத்தைச் சார்ந்த மக்களை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இருந்து மலேரியாவை எதிர்க்க என்று கூர்ப்படைந்த "DARC" மரபணுவைக் கொண்டவர்களிடத்தில் அதே நோய்க்கு எதிராக கூர்ப்படையாத "DARC" மரபணுவைக் கொண்டவர்களைக் காட்டினும் சுமார் 40% அதிகரித்த அளவில் எயிட்ஸ் தாக்கம் ஏற்படுவதாக அமெரிக்க மற்றும் பிரித்தானிய விஞ்ஞானிகள் இனங்கண்டுள்ளனர்.

மலேரியாவுக்கு எதிராக கூர்ப்படையாத "DARC" மரபணு உடலில் chemokines எனும் இரசாயனத்தின் அளவில் செல்வாக்குச் செய்து, எயிட்ஸ் நோய்க்கான வைரசின் தாக்கத்தை குறைக்கும் வகையில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி போராட வசதி அளிப்பதாகக் கண்டறிந்துள்ள விஞ்ஞானிகள்.. மலேரியாவின் பெருக்கத்தால் பெருமளவிலான மக்கள் இந்த மரபணுவில் கூர்ப்படைந்த மரபணுவையே தற்போது காவி வரும் நிலையை அடைந்துள்ளதாக கண்டறிந்துள்ளனர். எனினும் இந்த மரபணுக் கூர்ப்பைத் தூண்டும் குறிப்பிட்ட காரணியை விஞ்ஞானிகள் இன்னும் தெளிவாக இனங்காண முடியவில்லை.

அதுமட்டுமன்றி கூர்ப்படையாத "DARC" மரபணுவைக் கொண்டுள்ள மக்கள் எயிட்ஸுக்கு எதிராக அதிக காலம் தாக்கும் பிடிக்கும் தன்மையைக் கொண்டுள்ளமை குறித்தும் மேலும் தெளிவான விபரங்கள் அறியப்பட வேண்டி இருக்கின்றன என்று இவ்வாய்வுகளைச் செய்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமன்றி sickle cell அனீமியா குறைபாட்டைக் காண்பிக்கும் மரபணுவைக் கொண்ட மக்கள் மலேரியாவை எதிர்க்கும் சக்தியைக் கொண்டுள்ளனர் என்பதும் முன்னர் அறியப்பட்ட ஒன்றாக உள்ளது.

இந்தக் கண்டுபிடிப்புக்கள்.. மரபணுகள் சார்ந்து உருவாகும் அல்லது நிகழும் உடலிரசாயனக் கூறுகளின் மாற்றங்கள், நோய்களில் செய்யும் செல்வாக்குப் பற்றிய மேலதிக படிப்புக்களையும் கண்டுபிடிப்புக்களையும் செய்ய உதவியாக அமையும் என்பதை எதிர்பார்க்கலாம். இவை பிற்காலத்தில் இந்த நோய்களை எதிர்த்துப் போராடக் கூடிய பொறிமுறைகளைக் கண்டறிய உதவியாகவும் அமையலாம்.

மலேரியாவுக்கு எதிரான புதிய கண்டுபிடிப்பு

உலகில் குறிப்பாக வெப்ப வலைய நாடுகளில் வருடத்துக்கு பல ஆயிரக்கணக்கானோரின் உயிரை பலி எடுக்கும் மலேரியா நோய்க்கு புதிய வகையில் சிகிச்சை அளிக்கக் கூடிய முறை ஒன்றை அவுஸ்திரேலிய ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மலேரியா நோயை உருவாக்கும் புரட்டோசோவா (Protozoa) வகை ஒட்டுண்ணி நோயாக்கி குருதியில் உள்ள செங்குருதிக் கலங்களுள் புகுந்து கொண்டு குறிப்பிட்ட காலம் வாழ்வதால் அவ்வாறு ஒட்டுண்ணிகள் புகுந்து கொண்ட செங்குருதிக் கலங்களை உடலில் உள்ள நிர்ப்பீடணம் (immune system) இனங்கண்டு தாக்காதிருக்க உதவும் புரதப் பசைப் படையை உருவாக்கும் 8 புரத மூலக் கூறுகளை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் 8 புரத மூலக்கூறுகள் சேர்ந்து ஆக்கப்படும் அந்த பாதுகாப்புப் பசையில் ஒரு புரத மூலக்கூறின் உற்பத்தியை தடுத்தாலே அதன் செயற்பாட்டைத் தடுத்து ஒட்டுண்ணி நோயாக்கி புகுந்து கொண்டுள்ள செங்குருதிக் கலங்களை இலகுவாக தாக்கி அழிக்க வகை செய்ய முடியும் என்று ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Monday, July 21, 2008

அதி குளிர் சூழலில் கடவுளின் துகளைத் தேடும் பணி


இந்தப் பிரபஞ்சத்தை ஆக்கியுள்ள கூறுகளிற்கான அடிப்படைக் கூறை (கடவுளின் துகளை) கண்டறிய என்று, பிரான்ஸ் - சுவிஸ் எல்லைகளூடு நிலத்தின் கீழே உருவாக்கப்பட்டுள்ள 27 கிலோமீற்றர்கள் பரிதியுடைய வட்டக் குழாய் வடிவ Large Hadron Collider இல் திரவ நிலைக் கீலியத்தையும் பல ஆயிரம் மின்காந்தங்களையும் பயன்படுத்தி ஆழமான விண்வெளியில் உணரப்படும் வெப்பநிலைக்கும் குறைவான வெப்பநிலையை உருவாக்கி இருக்கின்றனர்.


இதில் உணரப்பட்ட வெப்பநிலை 1.9 கெல்வின் (K)(-271C; -456F) ஆக இருக்கிறது. விண்வெளியில் ஆழமான பகுதியில் வெப்பநிலை கிட்டத்தட்ட 2.7 கெல்வின் ஆக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.


உலகிலேயே பிரமாண்டமான பெளதீகவியல் பரிசோதனைக் கூடமாக விளங்கும் இந்த Cern lab இல் அமைக்கப்பட்டுள்ள Large Hadron Collider (LHC) நடத்தப்படவிருக்கும் பரிசோதனையில், கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் எதிர் எதிர் திசைகளில் நேர் ஏற்றமுள்ள புரோத்திரன் (Proton)களை மோதவிட்டு அவை மோதிச் சிதறும் வேளையில் பிறக்கும் துகள்கள் பற்றி ஆராய இருக்கின்றனர்.


இத்துகள்களினை தன்மைகளை அடையாளம் கண்டுவிட்டால் பிரபஞ்சத்தில் சடப்பொருட்களை ஆக்கியுள்ள அணுக்கள் கொண்டுள்ள உப அணுத்துணிக்கைகளை ஆக்கியுள்ள பிரதான அடிப்படைக் கூறை அல்லது கூறுகளை இனங்காணலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.


இவற்றையே அவர்கள் கடவுளின் துகள் அல்லது துகள்கள் என்று கருதுகின்றனர்.இதற்கிடையே இந்தப் பரிசோதனையால் செயற்கையான கறுப்போட்டை அல்லது கருந்துளை (Black hole) ஒன்று பூமியில் செயற்கையாக உருவாக்கப்படக் கூடிய சூழல் இருப்பதால் அது பூமிக்கு ஆபத்தாக அமையலாம் என்றும் சில விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.


எதுஎப்படியோ European Organization for Nuclear Research (CERN) அமைப்பால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த LHC ஆய்வு கூடம் தனது கடவுளின் துளைத் தேடும் பரிசோதனையை செய்ய ஆரம்பித்துக் கொள்ள இருக்கிறது என்பதையே மேற்குறிப்பிட்ட அதி குளிர் சூழல் உருவாக்கம் உணர்த்தி நிற்கிறது. இந்தப் பரிசோதனையின் போது மிகப் பெருமளவிலான சக்தி உருவாக்கப்படுவதோடு.. பெருமளவு வெப்பமும் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுவதால்.. ஆழமான விண்வெளியில் உள்ளது போன்ற இந்த அதி குளிர் சூழல் என்பது இப்பரிசோதனைக்கு முக்கியமான ஒன்றாகும்.

Wednesday, July 16, 2008

Kaviyarasu Vairamuthu’s 55th B’day on July 13th

வைரமுத்து (Vairamuthu, ஜூலை 13, 1953), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர், கவிஞர். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஐந்து முறை பெற்றுள்ளார். "கள்ளிக்காட்டு இதிகாசம்" என்ற நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ளார்.


வாழ்க்கைக் குறிப்பு


தமிழ் நாடு மாநிலம் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள வடுக பட்டியில் ராமசாமி - அங்கம்மாள் ஆகியோருக்கு மகனாக விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றார். 1984ல் "நிழல்கள்" திரைப்படத்தில் "இது ஒரு பொன்மாலை பொழுது.." எனத் தொடங்கும் பாடலை முதன் முதலில் இயற்றினார்.


இவருடைய மனைவியின் பெயர் பொன்மணி. இவருடைய மகன் கபிலன்.


படைப்புகள்


கவிதைத் தொகுப்பு


 • வைகறை மேகங்கள்

 • சிகரங்களை நோக்கி

 • திருத்தி எழுதிய தீர்ப்புகள்

 • தமிழுக்கு நிறமுண்டு

 • இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல

 • இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்

 • சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்

 • இதனால் சகலமானவர்களுக்கும்

 • இதுவரை நான்

 • கொஞ்சம் தேனீர் நிறைய வானம்

 • பெய்யென பெய்யும் ம‌ழை

 • நேற்று போட்ட கோலம்

 • ஒரு போர்களமும் இரண்டு பூக்களும்

 • ஒரு மெளனத்தின் சப்தங்கள்

நாவல் • தண்ணீர் தேசம்

 • கள்ளிகாட்டு இதிகாசம்

 • கருவாச்சி காவியம் (ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது)

விருதுகள் • சாகித்ய அகாதமி விருது

 • சிறந்த பாடலாசிரியருக்கன தேசிய விருது (ஐந்து முறை). விருது பெற்ற திரைப்படங்கள் (பாடல்கள்)
  முதல் மரியாதை (பாடல்:பூங்காற்று திரும்புமா)
  ரோஜா (பாடல்:சின்னச்சின்ன ஆசை)
  கருத்தம்மா (பாடல்:போறாளே பொன்னுத்தாயி...)
  சங்கமம் (பாடல்:முதன் முறை கிள்ளிப் பார்த்தேன்)
  கன்னத்தில் முத்தமிட்டால் (பாடல்:விடை கொடு எங்கள் நாடே..)

 • கலைமாமணி விருது (1990)

Tuesday, July 8, 2008

2 "சிம்"செல்போன் அறிமுகம்

ஜிஎஸ்எம் மற்றும் சிடிஎம்ஏ என 2 தொழில்நுட்பங்களிலும் இயங்கும் திறனுள்ள புதியரக செல்போன்களை மெரிடியன் மொபைல் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

இதன்படி, மெரிடியன் மொபைல் நிறுவனத்தின் ஃப்ளை பிராண்ட்-ன் V80, V80i, B700 மற்றும் B720 ரக செல்போன்களில் 2 சிம் கார்டுகளை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.1.85 இன்ச் டி.எஃப்.டி வண்ணத்திரை, 200 எஸ்எம்எஸ் சேகரிக்கும் வசதியுடன் கூடிய, V80 ரக செல்போனின் விலை ரூ.4,490 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. V80i ரக செல்போனில் கூடுதலாக எஃப்.எம் ரேடியோ மற்றும் ஸ்பீக்கர் போன் உள்ளது.

இதேபோல் B700 ரக செல்போனில் 2 மெகா பிக்சல் கேமரா, புளூடூத், ஜிபிஆர்எஸ், மெமரி ஸ்லாட் வசதிகள் உள்ளது. இதன் விலை ரூ.7,200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எட்ஜ் (EDGE) தொழில்நுட்பம் உட்பட பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட B720 Duo ரக செல்போனின் விலை ரூ.8,900 என மெரிடியன் மொபைல் வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, July 6, 2008

செயற்கை இரத்தக் குழாய்

மருத்துவத் துறையில் பல்வேறு சாதனை களைப் படத்துள்ள விஞ்ஞானிகள், தற் போது செயற்கை முறை யில் உடல் பாகங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

அவ்வாறான செயற்கை முறையில் இரத்த குழாய்களை உருவாக்கியுள்ளனர் சோச் சூசெட்ஸ் அமெரிக்க தொழில்நுட்ப நிலைய விஞ்ஞானிகள். செயற்கை முறையில் பெரிய அளவிலான இரத்த குழாய்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டு விட்டன என்றாலும் மிக நுண்ணிய அளவில் இரத்த குழாய்கள் உருவாக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை.

இதனைப் பரிசோதிக்கும் நடவடிக்கையின் முதற்கட்டமாக, மிருகங்களுக்கு இதனைப் பொருத்தி சோதனை செய்து வருகின்றனர்.

ஒலிவ் எண்ணெய் புற்றுநோய் ஆபத்தைக் குறைக்கிறது...

சமையலுக்கு ஒலிவ் எண்ணெய்யைப் பாவிப்பதால் சுமார் 9% புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்தைக் குறைக்கலாம் என்று கிறீஸ் மற்றும் ஸ்பெயின் வாழ் மக்களிடம் நடத்திய ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளது.

ஸ்பெயின் மற்றும் கிறீஸ் மக்களிடம் புற்றுநோய் மற்றும் இதய நோய் தாக்கம் ஒப்பீட்டளவில் குறைந்திருப்பதற்கு அவர்களின் உணவுப்பழக்கமே முக்கிய காரணம் என்று அறியப்பட்டுள்ளது.

அதிகம் பழங்கள் மற்றும் மரக்கறி வகைகளையும், ஒலிவ் எண்ணொய், மீன் உணவுகளையும், சிவப்பற்ற இறைச்சிகளையும், சீரியல் வகைகளையும் மற்றைய உணவுகளை விட உண்பது புற்றுநோய் மற்றும் இதய நோய்களைக் குறைக்க உதவும் என்றும் குறித்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஒலிவ் எண்ணொய் அதிக அளவு நிரம்பாத கொழுப்பு அமிலங்களைக் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிறிதொரு ஆய்வில் புறோக்கோலி (Broccoli) மற்றும் cruciferous வகை மரக்கறிகளை நாளாந்த உணவில் சேர்த்துக் கொள்வது ஆண்களில் புறஸ்ரேற் (prostate) புற்றுநோய் ஏற்படுவதைக் கட்டுப்படுத்துவதாக கண்டறிந்துள்ளனர். புறோக்கோலியில் உள்ள இயற்கையான இரசாயனங்கள் ஆண்களில் புறஸ்ரேற் சுரப்பியில் உள்ள மரபணுக்களில் குறிப்பாக GSTM1 எனும் மரபணு மீது செல்வாக்குச் செய்து இந்த நோய் ஏற்படுவதைக் கட்டுப்படுத்த உதவுவதாக ஆதாரபூர்வமாகக் கண்டறியப்பட்டுள்ளது.

Tuesday, July 1, 2008

நிறைவான காலை உணவு உடல் நிறையைக் குறைக்கும்.

குறைவான காலை உணவை உண்பதால் மதியமும், இரவும் மற்றும் இடையிலும் என்று அதிகளவான உணவை உள்ளெடுக்கத் தூண்டும் அல்லது காலை உணவைத் தவிர்த்து மற்றைய வேளைகளில் அதிக அளவு உணவை உட்கொள்ளத் தூண்டுகிறது.

நிறைவான காலை உணவை உண்பதால் மதிய மற்றும் இரவு வேளைகளில் உள்ளெடுக்கும் உணவின் அளவைக் குறைத்துக் கொள்ள முடிவதோடு உடல் நிறையையும் சீராகக் குறைக்க முடியுமென்று அமெரிக்காவில் செய்யப்பட்ட ஆய்வில் இருந்து தெரிய வந்துள்ளது.

குறைந்தளவு காபோவைதிரேற்று (மாப்பொருள் உணவுகள்)அடங்கிய காலை உணவை உட்கொள்பவர்களுக்கு ஆரம்பத்தில் குறிப்பிட்ட காலத்துக்கு உடல் நிறை குறைவது போலத் தோன்றினும் பின்னர் அது அதிகரிக்கும் வகையில் அவர்களில் பசி மற்றும் உணவுத் தேவை தூண்டப்படுகிறது என்றும் இதனால் காபோவைதிரேற்று, நார் பொருட்கள் மற்றும் பழங்கள் அடங்கிய, கொழுப்புக் குறைந்த, நிறைவான காலை உணவை உட்கொள்வதன் மூலம் மிகுதி நாள் முழுவதும் பசித் தூண்டலை மட்டுப்படுத்தவும், அடுத்து வரும் வேளைகளில் உள்ளெடுக்கும் உணவின் அளவைக் கட்டுப்படுத்தவும் என்று அமைகின்ற ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை உருவாக்கிக் கொள்வதே நிறைக் குறைப்புக்கும் உடல்நலனுக்கும் நல்ல வழிமுறை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சுறா மீனில் இருந்து புற்று நோய்க்கு மருந்து


புற்று நோய்க்கு புதுப்புது மருந்துகளை கண்டு பிடிக் கும் ஆராய்ச்சியில் ஆஸ்தி ரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழக விஞ்ஞானி கள் ஈடுபட்டனர்.இந்த ஆராய்ச்சிக்குப் பிறகு அவர்கள் சுறா மீன் களின் செல்களில் இருந்து புற்று நோய்க்கு மருந்து கண்டு பிடித்துள்ளனர். சுறாமீன் செல்களில் உள்ள மரபணுக்களை எடுத்து அவற்றுடன் சோதனை கூடத்தில் புரோட்டீன் களை சேர்த்து அவற்றை நோய் எதிர்ப்பு செல்களாக மாற்றினார்கள்.


இந்த செல்களை உடலில் செலுத்தியதும் அந்த நோய் எதிர்ப்பு செல்கள் புற்று நோய் செல்களை அழித்து விட்டன. அது மட்டு மல்ல மலோசியா, வாத நோய், முட்டு வலி போன்றவற்றுக் கும் இதை மருந்தாக பயன் படுத்தலாம்.