Wednesday, November 4, 2009

108 ஆண்டுகளுக்கு பின் அரிய சூரிய கிரகணம்



108 வருடத்திற்கு பிறகு வரும் 'கங்கண சூரிய கிரகணம்' வரும் ஜனவரி 15ம் தேதி நிகழ்க்கிறது.

அரிய நிகழ்வாக 2010 ஜனவரி மாதம், இரண்டு கிரகணங்கள் நிகழவுள்ளன. புத்தாண்டு அன்று முதல்நாள் சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது.

ஜனவரி 15ம் தேதி சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இக்கிரகணம் இலங்கையின் வடக்குப்பகுதிகளில் ஓரளவு தெளிவாகத் தெரியும்.

இந்த சூரிய கிரகணம் மிகவும் சிறப்பானது. இதற்கு முன்னர் 1901ம் ஆண்டு நவம்பர் 11ம் நாள் கங்கண சூரிய கிரகணம் நிகழ்ந்துள்ளது.

மீண்டும் 2019 டிசம்பர் அன்றுதான் கங்கண சூரியகிரகணம் இலங்கையில் தெரியும். புவியை நிலவு ஒரு நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. இதனால் புவிக்கு அருகே வரும்போது 3 லட்சத்து 57 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தொலைவிலும், புவியை விட்டு விலகி செல்கையில் 4 லட்சத்து 7 ஆயிரத்து 100 கிலோமீட்டர் தொலைவிலும் நிலவு இருக்கும்.

தொலைவில் இருக்கும் போது நிலவின் தோற்றம் சிறியதாக இருக்கும். எனவே புவியை விட்டு விலகிச் செல்கையில் சூரிய கிரகணம் நடந்தால் சந்திரனால் சூரியனை முழுமையாக மறைக்க முடியாது. இதனையே கங்க சூரிய கிரகணம் என்று அழைக்கிறோம்.

Saturday, September 19, 2009

9-வது உலகத் தமிழ் மாநாடு

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிய மொழி இல்லையென்று சின்ன வயதிலிருந்து எல்லோரும் சொல்கிறோம். ஆனால் இந்த தமிழ் மொழிக்கு நாம் என்ன செய்கிறோமென்று கொஞ்சமாவது?


இல்லையே?

ஆனால் தமிழ்மொழியைக் காதலிக்கும், உயிருக்கு உயிராய் மதிக்கும் பலர் தமிழுக்குத் தொண்டாற்றப் பல வழிகளைத் தேடுகின்றனர். உலகில் இருக்கும் தமிழறிஞர்கள் பலரையும் ஒரே இடத்தில் கூட்டி உலகத் தமிழ் மாநாடு நடத்தும் திட்டமும் இதில் ஒன்றுதான்.

உலகத் தமிழ் மாநாடு பலமுறை உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்றுள்ளது.

முதலாவது உலகத் தமிழ் மாநாடு 1966, ஏப்ரலில் மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் நடைபெற்ற பன்னாட்டு தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஆகும். இந்த மாநாட்டை தனிநாயகம் அடிகளார் முன்னின்று ஒருங்கிணைத்தார். இந்த மாநாட்டில் அன்று தமிழியல் ஆய்வில் பங்கெடுத்த பல்லின ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு தமிழ்நாட்டுத் தலைநகரான சென்னையில் 1968 ம் ஆண்டு நடைபெற்ற பன்னாட்டு தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஆகும். இந்த மாநாட்டின் முதல் நாள் சென்னை கடற்கரையில் தமிழ் அறிஞர்களான திருவள்ளுவர், அவ்வையார், கம்பர், ஜி. யு. போப், கால்டுவெல், பாரதியார், பாரதிதாசன், வ. உ. சி, வீரமாமுனிவர் ஆகிய 9 பேரின் சிலைகள் திறக்கப்பட்டன. இவர்களோடு தமிழ் இலக்கிய சிலப்பதிகாரத்தின் முக்கிய கதாபாத்திரமான கண்ணகியின் சிலையும் திறக்கப்பட்டது.

1970 ஆம் ஆண்டில் பேராசிரியர் ஜீன் பிலியோசா பாரிசிலே மூன்றாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை நடத்தினார்.

நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1974 ஆம் ஆண்டு சனவரி மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு வரிசையை ஆரம்பித்து வைத்திருந்தவரான அனைத்துலகத் தமிழாராய்ச்சிமன்றத்தின் தோற்றுநர் வண. சேவியர் தனிநாயகம் அடிகளாரால் நான்காம் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் வைத்து வைபவ முறைப்படி திறந்து வைக்கப்பட்டது. யாழ் நகரம் சோடனைகளாலும், மின் அலங்காரங்களாலும், சப்புறங்களாலும் விழாக் கோலம் பூண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மாநாட்டின் ஆய்வு அமர்வுகள் வீரசிங்கம் மண்டபத்திலும் யாழ். றிமர் மண்டபத்திலும் சிறப்பாக நடைபெற, அதன் கலை நிகழ்ச்சிகள் யாழ். திறந்த வெளியரங்கிலும் தமிழர் பண்பாட்டுப் பொருட்காட்சி சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மண்டபத்திலும் மாலையில் நடைபெற்றன. 1974 ஆம் ஆண்டில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்திலே நடைபெறுவதற்கு முன்னின்று உழைத்தவர்களில் ஒருவர் பேராசிரியர் வித்தியானந்தன் ஆவார்.

7 ஆண்டுகளுக்குப் பிறகு 1981-ல் மதுரையில் 5-வது மாநாடும், பின்னர் மலேசியாவில் 6-வது மாநாடும், மோரிஷஸில் 7-வது மாநாடும், 1995-ல் தஞ்சாவூரில் 8-வது உலகத் தமிழ் மாநாடும் நடைபெற்றன.

13 ஆண்டுகளைக் கடந்த பிறகும் 9-வது உலகத் தமிழ் மாநாடு நடைபெறுவதற்கான அறிகுறிகள் இப்போதுதான் தென்படத் தொடங்குகின்றது.
தற்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களினால் அதற்கான அடித்தளம் இடப்பட்டுள்ளது. அதன்படி 15 ஆண்டுகளின் பின் 9 வது உலகத் தமிழ் மாநாடு தமிழகம் கோவையில் அடுத்த ஆண்டு (2010) சனவரி மாதம் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு நடைபெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநாடு நடைபெறும்பட்சத்தில் தமிழ் இலக்கிய, இலக்கணத்தின் சிறப்புகள் பற்றியும், பண்பாட்டு வளர்ச்சி, வரலாறு, அகழ்வாய்வுகள், கலைகள், தொன்மை, மொழியியல் பற்றியும் பல ஆராய்ச்சி உண்மைகள் வெளி வரும்.
மேலும், ௧௩ ஆண்டுகளாக உலகம் முழுவதும் உள்ள பல ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்புகள், கட்டுரைகள், ஆய்வேடுகள் மாநாட்டில் வாசிக்கப்படும். அப்போது தமிழர்களின் தொன்மையையும், பெருமையையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

நமது பெருமையும், சிறப்பும் பழைமையோடு நின்றுவிடாமல் மாறிவருகின்ற வரும் உலகில் தமிழர்களாகிய நாமும் புதிய வரலாற்றைப் படைக்க வேண்டும்.

உலகளவில் தமிழ் ஆய்வில் ஆர்வத்தை உருவாக்குவதோடு கடல் கடந்து பல நாடுகளிலும் வாழுகின்ற நம் தமிழ் உறவுகளிடையே ஒற்றுமையுணர்வை வளர்க்கப் பாடுபட முயலவாவது வேண்டும்.
1995-ம் ஆண்டு தமிழகத்தின் அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் முயற்சியால் 8-வது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது.
தமிழ் மீது அளவற்ற பற்றுடன், தமிழுக்கு செம்மொழித் தகுதியை பெற்றுத் தந்த தமிழக முதல்வர் கருணாநிதியின் முயற்சியால் 9-வது உலகத் தமிழ் மாநாடு நடைபெறுவது மகிழ்ச்சியே.

வாழ்க தமிழ் வளர்க அதை வாழவைப்போர் சேவை....

Thursday, September 3, 2009

சாதனைச் சந்திராயன் 1...

சந்திரனை ஆராய்வதற்காக இந்தியாவிலிருந்து நிலவுக்கு முதன்முதலாக இந்தியாவின் விண்வெளி நிறுவனமான இஸ்ரோ அனுப்பிய 'சந்திராயன் 1 ' விண்கலம் திடீரென செயலிழந்தது விஞ்ஞானிகளுக்கு மட்டுமல்லாது பலருக்கும் அதிர்ச்சியாக அமைந்தது. இரண்டுவருடம் செயற்படும் என எதிர்பார்த்த இந்த விண்கலம் பத்து மாதத்திலேயே செயலிழந்தது அதிர்ச்சியை தருவது நியாயம்தானே..

இருந்தாலும் இந்திய முன்னாள் அணு விஞ்ஞானியும் ஜனாதிபதியுமான அப்துல் கலாம் மற்றும் பல விஞ்ஞானிகள் இந்த 'சந்திராயன் 1' விண்கலத் திட்டம் வெற்றியளித்துள்ளதகக் கூறியுள்ளனர். இது அனுப்பப்பட்ட நோக்கத்தில் 90% பூர்த்தியாகியுள்ளதேனவும் அறிவித்துள்ளனர்.

நிலவின் மேற்பரப்பை 'சந்திராயன் 1'விண்கலம் எடுத்தனுப்பிய படங்களிலிருந்து பல்வேறு தகவல்கள் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அதில், அமெரிக்காவினால் அனுப்பப்பட்ட 'அப்பலோ 15' என்ற விண்கலம் நிலவைச் சென்றடைந்ததா என்பதில் இருந்துவந்த சந்தேகம் தற்போது தீர்ந்துள்ளது. 40 ஆண்டுகளுக்குமுன் நிலவில் அந்த விண்கலம் ஏற்படுத்திய கோடுகளைச் 'சந்திராயன் 1' விண்கலம் படம்பிடித்து அனுப்பியுள்ளது.

'சந்திராயன் 1' விண்கலத்தில் பொருத்தப்பட்டிருந்த அதி நவீன (ஹைபெர் ஸ்பெக்டல்)கேமரா மூலமாகக் பல்வேறு படங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதன் மூலமே 'அப்பலோ 15' நிலவில் இறங்கிய இடமும், அது நடந்தபோது ஏற்பட்ட அடையாளங்களும் மிகத் தெளிவாகத் தென்படுகின்றதாம்.

அதேபோல் விண்வெளிவீரர்கள் பயணம் செய்த தானியங்கி ரோபோக்கள் சென்ற பாதைகளும் படம்பிடித்து அனுப்பப்பட்டுள்ளன. நிலவின் மேட்பரப்பிலுள்ள கருப்பு நிறத் தூசிகள் உள்ளன. அதில் இந்தப்பாதைகள் தெளிவாகத் தெரிகின்றன.

எனினும் நிலவில் கால் பதித்த நீல் ஆம்ஸ்ரோங் மற்றும் எட்வின் ஆல்ரின் ஆகியோரது கால்த் தடங்கள் மிகவும் மங்கலாகவே தென்படுகின்றன.
கனிய வழங்கள் குறித்து 'சந்திராயன் 1' அனுப்பிய படங்களிலிருந்து நிலவின் மேற்பரப்பில் கால்சியம் இருப்பது தெளிவாகியுள்ளது. குறைந்த அடர்த்தி மற்றும் இரும்புப் பற்றாக்குறை காரணமாக அவை மிதக்கின்றனவாம்.

நிலவில் இன்னும் எத்தனை எத்தனை மர்மங்கள் உள்ளனவோ?

Sunday, August 30, 2009

இப்படியும் சொல்லுறாங்க...

வழமையாக வாரநாட்களில் காலை 6 மணிமுதல் 10 மணிவரை வானொலியில் நான் மொக்கை போடும் நிகழ்ச்சி வணக்கம் தாயகம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விடயம் தொடர்பாகப் பேசுவது வழக்கம்.


நேற்று ஞாயிற்றுக்கிழமை வணக்கம் தாயகம் நிகழ்ச்சி செய்ய யாரும் இல்லாததால் திடீரென நான் நிகழ்ச்சிக்கு வந்தேன். வழமையாகவே நிகழ்ச்சிக்கு வந்திருந்தபின்பு தான் அன்றைய தலைப்பு என்ன என்பது பற்றி யோசிப்போம். நேற்றும் அப்படித்தான். எதைப்பற்றி கதைப்பதேன்று கையில் கிடைத்த பத்திரிகையைப் புரட்டியும்,TV channel களை சுழற்றியும், இணையத்தளங்களை அலசியும் பார்த்ததில் ஒரு விஷயம் சிக்கியது.


நகைச்சுவையாக தத்துவங்கள் சொல்லுங்க என்று அழைத்தேன். வந்துகுவிஞ்சுது பாருங்க... சரி சரி அதில சிலவற்றை இங்கே பதிகிறேன் வாசித்துத்தான் பாருங்களேன்.


01. மீன் பிடிச்சா மீனவன். மான் பிடிச்சா மாணவனா?

02. என்னதான் தீக்கொழியாக இருந்தாலும் அவிச்ச முட்டை போடமுடியாது.

03. Tea cup இற்குள்ள tea இருக்கும், World cup இற்குள்ள world இருக்குமா?

04. Phone இல் signal கிடைக்கும், signal இல் phone கிடைக்குமா?

05. முட்டைத் தோசைக்குள் முட்டை இருக்கும், வெங்காயத் தோசைக்குள் வெங்காயம் இருக்கும், plain தோசைக்குள் plain இருக்குமா?

06. Pencil box இல் pencil வைக்கலாம். Iron box இல் iron வைக்கலாமா?

07. Bus stand இல் Bus நிற்கும், கொசு stand இல் கொசு நிற்குமா?

08. Phone இற்குள் sim ஐப் போடலாம், ஆனால் sim இற்குள் phone ஐப் போடலாமா?

09. மீன் வலையில் மீன் இருக்கும், கொசு வலையில் கொசு இருக்குமா?

10. பாம்பு வந்தால் படம் எடுக்கும், படம் எடுத்தால் பாம்பு வருமா?

11. முயலும் ஜெய்க்கும், ஆமையும் ஜெய்க்கும், ஆனால் முயலாமை ஜெய்க்காது.

12. Phone இற்கு bill கிடைக்கும், ஆனால் bill இற்கு phone கிடைக்குமா?

13. Tea glass இல் tea ஐப் பிடிக்கலாம், sun glass இல் sun ஐப் பிடிக்கலாமா?

14. கடிகாரம் எவ்வளவுதான் ஓடினாலும், அதனால் olympic இல் ஓட முடியாது.

15. கொய்யா மரத்தில கொய்யாப்பழம் இருக்கும். தென்னைமரத்தில் தென்னம்பழம் இருக்குமா.

16. என்னதான் dialog sim போட்டாலும் தும்மும் போது Hatch என்றுதான் தும்மவேண்டும்.

எப்பீடீ.......

Wednesday, August 26, 2009

எவ்வளவு செய்திட்டோம் இதைச் செய்ய மாட்டோமா?

எவ்வளவு செய்திட்டோம் இதைச் செய்ய மாட்டோமா? இது விஜய் வசனம் தான். ஆனால் இது ஜதார்த்தத்தில் எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என்பது???
நம்ம விஜய் அகில இந்திய காங்கிரசில் இணையப்போறாராம்... என்ன கொடுமை விஜய் இது?

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியின் அழைப்பின் பேரில், டெல்லி சென்று அவரைச் சந்தித்துப் பேசினார் விஜய்.இதனால் காங்கிரசில் விஜய் இணையக்கூடும் என்று பரவலாகப் பேசப்பட்டது.

இந்த விடயம் தொடர்பாக வணக்கம் தாயகத்தில் பேசிவிட்டு வந்து 10 மணிக்கு இணையத்தை தட்டிப் பார்த்தபோது ஐ...யோ.. என்றானது. இதை அறிந்த உங்களில் பலருக்கும் அப்பிடித்தான் இருந்திருக்கும்.

வெகு விரைவில் "சோனியா அம்மையார் தைரியமான பெண்மணி" அது இது என்று நம்ம தமிழ்த் தாத்தக்கணக்கா (மு.கருணாநிதி) விஜய் அனல் பறக்கப் பேசுவார் பாருங்க. காரணம் விரைவில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, பொதுச் செயலாளர் ராகுல் காந்தி ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளார் தளபதி.


இதுதொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும், இது காங்கிரஸ் மற்றும் விஜய் இருவருக்கும் பலம் சேர்ப்பதாக அமையும் என்றும் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் ( ஆமா வட்டம், சதுரம், செவ்வகம் எல்லாமேதான்) தெரிவிக்கின்றன.

விஜய் சமீபத்தில்தான் மக்கள் இயக்கம் என்னும் அமைப்பைத் தொடங்கினார். இந்த இயக்கம் சார்பில் தமிழகம் முழுக்க கம்ப்யூட்டர் கல்வி மையங்கள், இலவச திருமண மண்டபங்கள் என தனது வலையமைப்பைப் பலப்படுத்தியும் வருகிறார். அதுமட்டும் இல்லாமல் ஒரு அரசியல் கட்சிக்கே இல்லாத அளவு ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் சொந்த கட்டடங்களை ஏற்படுத்தி அதில் மக்கள் இயக்கத்தை இயங்க வைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளாராம்.

விஜய்யின் இந்த வலையமைப்பை அப்படியே காங்கிரஸ் கட்சிக்கு, அதுவும் அவர் ஒரு கட்சியின் தலைவராக மாறும் முன்னரே இழுத்துப் போட்டுவிட வேண்டும் என விரும்பியே ராகுல் காந்தி, டெல்லிக்கு வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.



இந்தப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடந்தது என விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் கூறியுள்ளார். அதாவது தன்னை இளைஞர் காங்கிரஸ் தலைவராக நியமிக்க வேண்டும் என விஜய் கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு ராகுல் காந்தியும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


தனிக்கட்சி தொடங்கிய விஜய்காந்த், சரத்குமார் எல்லோருமே அடுத்து என்னசெய்வது என்று தலையைச் சொறிந்துகொண்டு ததிங்கினதோம் போடுவதால், வேண்டாம் விஷப்பரீட்சை என்ற தனது நலம் விரும்பிகளின் ஆலோசனையின் பேரிலேயே இந்த முடிவுக்கு வந்துள்ளாராம் விஜய்.
மேலும் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளில், காங்கிரசில் மட்டுமே நடிகர்கள் யாரும் இல்லை என்பதால், அதில் இணைய அவர் முடிவெடுத்துள்ளாராம்.


ராகுல் காந்தியிடம் தனது விருப்பத்தைச் சொன்ன விஜய், விரைவில் சோனியா காந்தி முன்னிலையில் முறைப்படி காங்கிரஸ் கட்சியில் இணைந்துகொள்வாரம்.

இதுபற்றி விஜய் தரப்பில் கேட்கப்பட்ட போது, இன்னும் சில நாட்கள் பொறுத்திருந்து பாருங்கள் என்பதே பதிலாக வந்துள்ளதாம்.

அரசியல் ஆசை யாரைத்தான் விட்டுது.... பார்க்கலாம் பார்க்கலாம் விஜயின் அரசியல் அவதாரம் அவரின் அண்மைய திரைப்படங்கள் போல் இல்லாவிட்டால் சரி..

Monday, August 24, 2009

ஒளிரும் தங்கப்பையன்..

"விளையாட்டுன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதிலும் தடகள விளையாட்டுன்னா எனக்கு ரொம்பவே பிடிக்கும்..." என்ன இது வெற்றிவிழா பட வில்லன் வசனம் போல இருக்கு என்று யோசிக்கிறீங்களா?
Cricket பற்றியே எல்லோரும் பேசும் போது திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது உலக தடகளப் போட்டி. பல வீரர்கள், பல வேதனைகள், பல சாதனைகள் என நடந்து முடிந்த இப்போட்டிகளில் உலகமே வியந்து பேசியது ஒரே ஒரு வீரரைப்பற்றித்தான்.


"அடடே என்ன வேகமா ஓடுறார் " என்று மூக்கில் விரல் தடகளத்தில் போல்ட் பெற்ற தான் ஜமைக்காவின் "ஒளிரும் தங்கப்பையன்" உசைன் st.லியோ போல்ட். (Usain st. Leo Bolt)



உசைன் st.லியோ போல்ட், 1986 ஆகஸ்ட் 21 ஆம் திகதி பிறந்த ஜமைக்க அதிவேக ஓட்டவீரர். அண்மையில் 100 m மற்றும் 200 m ஓட்டங்களிலும், தனது சக வீரர்களுடன் இணைந்து 4 X 100 m அஞ்சலோட்டத்திலும் பதக்கம் வென்றுள்ள இவர் 2008 ஒலிம்பிக்கில் இந்த பிரிவுகளிலும் சாதனைபுரிந்துள்ளார். போல்ட், 2008 கோடைகால ஒலிம்பிக்கில் மேற்குறிப்பிட்ட மூன்று ஓட்டப் பிரிவுகளிலும் தங்கம் வென்று 1984 ஆம் ஆண்டு கார்ல் லெவிஸ் ஏற்படுத்திய சாதனையை முறியடித்ததோடு ஒரே ஒலிம்பிக் போட்டியில் மூன்று உலக சாதனைகளை ஏற்படுத்திய முதல் வீரர் என்ற பெருமையையும் தனதாக்கிக்கொண்டார்.

2004 ஆம் ஆண்டு முழுநேர தடகள வீரரான போல்ட், ஆரம்பத்தில் சில போட்டிகளில் பங்குபட்ட முடியாது போனாலும் 2004 கோடைகால ஒலிம்பிக்கில் போட்டியிட்டார். 2008 மே மாதம் தனது முதல் 100 m பிரிவில் உலக சாதனையை 9.72 வினாடிகளில் ஓடி நிகழ்த்திக்காட்டிய போல்ட், 2008 Beijing ஒலிம்பிக் போட்டியில் 100 m மற்றும் 200 m ஓட்டப்பிரிவுகளில் மீண்டும் உலக சாதனையை நிலைநாட்டினார். 100 m பிரிவில் தனது 9.72 என்ற நேரப்பெருதியை முறியடித்து, 9.69 வினடிகளிலும் 200 m பிரிவில், 1996 அட்லாண்டா ஒலிம்பிக்கில் அமெரிக்காவின் Michael Johnson ஏற்படுத்திய 19.32 என்ற நேரப்பெருதியை முறியடித்து 19.30 வினாடிகளில் ஓடி உலக சாதனை புரிந்தார். Beijing ஒலிம்பிக் நிறைவடைந்தது சரியாக ஒரு வருடத்தின் பின் ஆகஸ்ட் 2009 இல் Berlin Germany இல் நடைபெற்ற உலக தடகளப் போட்டிகளில் 100 m மற்றும் 200 m பிரிவுகளில் முறையே 9.58 மற்றும் 19.19 வினாடிகளில் ஓடித் தனது சாதனையை தானே முறியடித்துள்ளார். Digital நேரக் கணிப்பு முறை ஆரம்பிக்கப்பட்டதன் பின்பு பதிவான ஆகக்குறைந்த நேரப்பெருதி, போல்ட் ஏற்படுத்திய 9.58 என்ற சாதனை நேரம்தான்.

தடகளத்தில் போல்ட் பெற்ற வெற்றிகளை கருத்திற்கொண்டு 2009 ஆம் ஆண்டின் உலகப் பிரசித்திபெற்ற விளையாட்டு வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அதுமட்டுமில்லாது "Lighting Bolt" (ஒளிரும் போல்ட்) எனவும் செல்லமாக அழைக்கப்படுகின்றார்.

உசைன் போல்ட் 1986 ஆகஸ்ட் 21 ஆம் திகதி ஜமைகாவிலுள்ள Trelawny என்னும் இடத்திலுள்ள Sherwood என்னும் சிறிய நகரத்தில் பிறந்தார்.

அப்பா - Wellesely Bolt
அம்மா - Jennifer Bolt
சகோதரர் - Sadeeki Bolt
சகோதரி - Sherine Bolt

இவரது பெற்றோர் அவர்களின் ஊரில் ஒரு பலசரக்குக் கடை நடத்தி வந்துள்ளனர். போல்ட் சிறுவயதில் தனது சகோதரருடன் தெருக்களில் cricket மற்றும் உதைப்பந்தாட்டம் விளையாடுவதில் அதிக ஆர்வம் காட்டியுள்ளார். சிறுவயதில் விளையாட்டைவிட வேறு எதைப்பற்றியும் சிந்திததில்லை என போல்ட் ஒரு பெட்டியிலே கூறியுள்ளார்.

அவர் ஆரம்பத்திலே கல்விகற்ற Waldensia Primary எனும் பாடசாலையிலேயே தனக்குள் மறைந்திருந்த ஓட்டத்திறமையை முதன்முதலில் வெளிப்படுத்தினார். தனது 12 ஆவது வயதில் 100 ம இல் பாடசாலையின் அதிவேக ஓட்டவீரராகத்திகழ்ந்தார் போல்ட்.

போல்ட் William Knibb ஞாபகார்த்த உயர் பாடசாலையில் கல்விகற்கும் காலத்தில் வேறு விளையாட்டுக்களிலும் அதிக ஆர்வம் காட்டினார். ஆனால் அவரின் cricket பயிற்சியாளர் அவரைத் தடகளத்தில் அதிக கவனம் செலுத்தினால் சிறந்த எதிர்காலம் உண்டு எனக்கூறி அதற்கு வழிநடத்தினார்.



போல்ட்டின் ஆரம்பகால தடகளப் பயிற்சியாளர்களாக இருந்தவர்கள் முன்னாள் ஒலிம்பிக் வீரர்களான Pablo McNeil மற்றும் Dwayane Barrett. பாடசாலை மட்டப்போட்டிகளில் போல்ட் திறமையை வெளிப்படுத்தினாலும் பயிற்சிகளில் போதிய அர்ப்பணிப்பின்மை மற்றும் இயற்கையாகவேயுள்ள நகைச்சுவையுணர்வு என்பன McNeil இற்கு வருத்தத்தையே ஏற்படுத்தியது.


2001 ஆம் ஆண்டு நடைபெற்ற கரிபியன் தீவுகளுக்கிடையேயான CARIFTA போட்டிகளில் 400 M மற்றும் 200 M பிரிவுகளில் போல்ட் வெள்ளிப் பதக்கத்தை பெற்றதுடன் 400 m பிரிவில் தன் சொந்த சிறந்த ஓட்டப்பெருதியைப் பெற்றார். அதே ஆண்டு Debrecen, Hungary இல் நடந்த IAAF உலக இளையோர் தடகளப் போட்டிகளில் முதன்முதலில் சர்வதேச ரீதியாகப் பங்குபற்றினார். ஆனால் அதில் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற முடியாதுபோனது. அப்போதும் அலட்சியமாகவே நடந்துகொண்டார்.

போல்ட்டின் நகைச்சுவைத் தன்மையால் ஒருமுறை போலீசிலும் மாட்டிக்கொண்டார். அதன் பின்பே அவர் தன்னை கொஞ்சம் சுதாகரித்துக்கொண்டு சர்வதேசப் போட்டிகளில் தனது திறமைகளை மிகவும் அபரிமிதமாக வெளிப்படுத்தினார்.

இதை அவதானித்த ஜமைக்காவின் முன்னாள் பிரதமர் P.J.Patterson அவர்கள் Kingstan சென்று பிரத்தியேகப் பயிற்சிபெற ஒழுங்கு செய்துகொடுத்தார்.

கடுமையான பயிற்சிகள் அர்ப்பணிப்புத்தன்மை என்பவற்றினால் போல்ட் தனது திறமையினை கொஞ்சம் கொஞ்சமாக மெருகூட்டி பல சர்வதேசப் போட்டிகளுக்குச் சென்று மிளிர ஆரம்பித்தார். 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற Athens ஒலிம்பிக் போட்டியில் கால் உபாதை காரணமாக முதற்ச்சுற்றிலேயே வெளியேறவேண்டியேற்பட்டது. அடுத்த ஒலிம்பிக்கிற்காகக் காத்திருந்த போல்ட் 2008 இல் சதனையாளரானார்.

2008 Beijing ஒலிம்பிக் போட்டியில் 100 m மற்றும் 200 m ஓட்டப்பிரிவுகளில் உலக சாதனையை நிலைநாட்டினார். 100 m பிரிவில் தனது 9.72 என்ற நேரப்பெருதியை முறியடித்து, 9.69 வினடிகளிலும் 200 m பிரிவில், 1996 அட்லாண்டா ஒலிம்பிக்கில் அமெரிக்காவின் Michael Johnson ஏற்படுத்திய 19.32 என்ற நேரப்பெருதியை முறியடித்து 19.30 வினாடிகளில் ஓடி உலக சாதனையை ஏற்படுத்தினார். தனது சக வீரர்களுடன் இணைந்து 4 X 100 m அஞ்சலோட்டத்திலும் 37.10 வினாடிகளில் ஓடி உலக சாதனையை ஏற்படுத்தி தங்கம் வென்று பதக்கங்களின் உறைவிடமானார்.





Berlin Germany இல் நடைபெற்ற உலக தடகளப் போட்டிகளில் 100 m மற்றும் 200 m பிரிவுகளில் முறையே 9.58 மற்றும் 19.19 வினாடிகளில் ஓடித் தனது சாதனையை தானே முறியடித்தார்.

போல்டிற்கு மிகவும் பிடித்த விஷயம் நடனமாடுவது. 2004 ஆம் ஆண்டு முதல் போல்ட் தனது சிறுவயது நண்பியான Mizicann Evans என்பவரை காதலித்துவருகிறார்.

போல்ட் ஓட்ட வீரராக வந்திராவிட்டால் cricket இல் வேகப்பந்து வீச்சாளராக வந்திருப்பாராம். அதுமட்டுமில்லை உசைன், பாகிஸ்தான் அணியின் Waqar Younis, இந்திய அணியின் Sachin Tendulkar, மேற்கிந்தியத் தீவுகளின் Chris Gayle மற்றும் ஆஸ்திரலியா அணியின் Matthew Hayden ஆகியோரின் விசிரியாவார். இவருக்கு உதைப்பந்தாட்டம் என்றாலும் அதிகம் பிடிக்கும். அதிலும் இவர் Manchester United பரம ரசிகர்.

காலத்திற்குக் காலம் சாதனை நாயகர்கள் உருவாகிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். "Lighting Bolt" இன் சாதனைப்பட்டியல் தொடரட்டும்.

வாழ்த்துக்கள் Bolt...