சூரிய மண்டலத்துக்கு வெளியே மேலும் ஒரு புதிய கோளை ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். வியாழனைப் போன்ற அளவு கொண்ட இந்தப் புதிய கோள், சூரியனைவிட சற்று பெரிய நட்சத்திர குடும்பத்தைச் சேர்ந்தது. இந்தக் கோள் கடந்த ஜூலை 3-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தப் புதிய கோள் 9.2 நாள்களில் தனது நட்சத்திரத்தை சுற்றிவிடுகிறது.
சுற்று வேகமும் அதன் எடையும் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாக இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இந்த கோளுக்குரிய நட்சத்திரமும் இந்த கோளும் கிட்டத்தட்ட ஒரே வேகத்தில் சுற்றுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புதிய கோள்களின் கண்டுபிடிப்பு பூமியைத் தவிர மற்றொரு கிரகத்தில் உயிரினம் வசிக்கலாம் என்ற எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.
சூரிய மண்டலத்துக்கு வெளியே உள்ள கோள்கள் குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக கோரட் என்ற செயற்கைக் கோளை ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கடந்த 2006-ம் ஆண்டு செலுத்தினர்.
இந்த செயற்கைக் கோள் 555 நாள்கள் விண்வெளியில் பயணம் செய்து இதுவரை 50 ஆயிரம் நட்சத்திரங்களைக் ஆய்வு செய்து வந்துள்ளது. இதுவரை 307 புதிய கோள்கள் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
1 comment:
Post a Comment