Sunday, August 30, 2009

இப்படியும் சொல்லுறாங்க...

வழமையாக வாரநாட்களில் காலை 6 மணிமுதல் 10 மணிவரை வானொலியில் நான் மொக்கை போடும் நிகழ்ச்சி வணக்கம் தாயகம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விடயம் தொடர்பாகப் பேசுவது வழக்கம்.


நேற்று ஞாயிற்றுக்கிழமை வணக்கம் தாயகம் நிகழ்ச்சி செய்ய யாரும் இல்லாததால் திடீரென நான் நிகழ்ச்சிக்கு வந்தேன். வழமையாகவே நிகழ்ச்சிக்கு வந்திருந்தபின்பு தான் அன்றைய தலைப்பு என்ன என்பது பற்றி யோசிப்போம். நேற்றும் அப்படித்தான். எதைப்பற்றி கதைப்பதேன்று கையில் கிடைத்த பத்திரிகையைப் புரட்டியும்,TV channel களை சுழற்றியும், இணையத்தளங்களை அலசியும் பார்த்ததில் ஒரு விஷயம் சிக்கியது.


நகைச்சுவையாக தத்துவங்கள் சொல்லுங்க என்று அழைத்தேன். வந்துகுவிஞ்சுது பாருங்க... சரி சரி அதில சிலவற்றை இங்கே பதிகிறேன் வாசித்துத்தான் பாருங்களேன்.


01. மீன் பிடிச்சா மீனவன். மான் பிடிச்சா மாணவனா?

02. என்னதான் தீக்கொழியாக இருந்தாலும் அவிச்ச முட்டை போடமுடியாது.

03. Tea cup இற்குள்ள tea இருக்கும், World cup இற்குள்ள world இருக்குமா?

04. Phone இல் signal கிடைக்கும், signal இல் phone கிடைக்குமா?

05. முட்டைத் தோசைக்குள் முட்டை இருக்கும், வெங்காயத் தோசைக்குள் வெங்காயம் இருக்கும், plain தோசைக்குள் plain இருக்குமா?

06. Pencil box இல் pencil வைக்கலாம். Iron box இல் iron வைக்கலாமா?

07. Bus stand இல் Bus நிற்கும், கொசு stand இல் கொசு நிற்குமா?

08. Phone இற்குள் sim ஐப் போடலாம், ஆனால் sim இற்குள் phone ஐப் போடலாமா?

09. மீன் வலையில் மீன் இருக்கும், கொசு வலையில் கொசு இருக்குமா?

10. பாம்பு வந்தால் படம் எடுக்கும், படம் எடுத்தால் பாம்பு வருமா?

11. முயலும் ஜெய்க்கும், ஆமையும் ஜெய்க்கும், ஆனால் முயலாமை ஜெய்க்காது.

12. Phone இற்கு bill கிடைக்கும், ஆனால் bill இற்கு phone கிடைக்குமா?

13. Tea glass இல் tea ஐப் பிடிக்கலாம், sun glass இல் sun ஐப் பிடிக்கலாமா?

14. கடிகாரம் எவ்வளவுதான் ஓடினாலும், அதனால் olympic இல் ஓட முடியாது.

15. கொய்யா மரத்தில கொய்யாப்பழம் இருக்கும். தென்னைமரத்தில் தென்னம்பழம் இருக்குமா.

16. என்னதான் dialog sim போட்டாலும் தும்மும் போது Hatch என்றுதான் தும்மவேண்டும்.

எப்பீடீ.......

3 comments:

ilangan said...

முட்டை அப்பத்தில முட்டை இருக்கும். பிளேன் அப்பத்தில பிளேன் இருக்குமா....

//வழமையாகவே நிகழ்ச்சிக்கு வந்திருந்தபின்பு தான் அன்றைய தலைப்பு என்ன என்பது பற்றி யோசிப்போம்//
எதையும் பிளான் பண்ணாம தான் செய்வீங்க போல....
எதையும் பிளான் பண்ணி தான் செய்யணுமாம்.
நம்ம கைப்புள்ள சொன்னார்.
முதன் முதலாய் உங்கள் வலைக்குள் பிரவேசித்தது. தொடருங்கள்..

Gana said...

thanks ilangan... இப்பதான் கொஞ்சம் திருந்தி வருகிறோம். வர வர ok ஆகிவிடும் boss

Anonymous said...

nalla etukku Gana anna. first ime unkada pakkam vanthitukkn. ennum thodata vaythukkal...

tharsha