சோதனை மேல் சோதனை போதுமடா சாமி.... இந்தப்பாட்டுத்தான் இப்ப எமது நாட்டுக்கு பொருந்துமோ என்று நினைக்க வேண்டியிருக்கு. யுத்தம் யுத்தம் என்று செத்த சனத்தை டெங்கு பிடித்து டொங்கு டொங்கு ஆட்டி ஓய்ந்த பாடில்லை அதற்கிடையில் புதிதாய் ஒரு பன்றியின் பாய்ச்சல்.
எங்கேயோ மெக்சிகோவில் தானே வந்திச்சு இங்கேயெல்லாம் வராது என்று இருந்தால், வச்சாய்ங்களே ஆப்பு....
எமது பக்கத்து நாடு இந்தியாவில் cricket score மாதிரி மணிக்கொரு தடவை பன்றிக்காய்ச்சலினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிச்சுக்கொண்டே போகுது. எப்போ இலங்கையில் பன்றிக்காய்ச்சலினால் இறந்தவர் தொடர்பான முதல் அறிவிப்பு வருமோ என்ற பயம் இருந்துகொண்டே இருக்கு.எங்கேயோ மெக்சிகோவில் தானே வந்திச்சு இங்கேயெல்லாம் வராது என்று இருந்தால், வச்சாய்ங்களே ஆப்பு....
வருமுன் காப்போம் என்பதுதானே எங்களின் தாரக மந்திரம். எனவே நான் அறிந்துவைத்துள்ள சிலவற்றை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளத் தீர்மாணித்தேன்.
சாதாரண காய்ச்சலுக்கும் பன்றிக் காய்ச்சலுக்கும் எப்படி வித்தியாசத்தை உணர்வது என்று பலருக்கும் குழப்பம்.
சாதாரண காய்ச்சலைப் போன்றே அனைத்து விஷயங்களும் பன்றிக் காய்ச்சலுக்கும் இருக்கும். காய்ச்சல் வந்ததும் உடல் சோர்வு, சளி பிடிப்பது என பன்றிக் காய்ச்சலுக்கும் அப்படித்தான் இருக்கும்.
பன்றிக் காய்ச்சல் பாதித்தவர்கள் பலருக்கு மூக்கு ஒழுகுதல், கழுத்தில் நெறி கட்டுதல், வாந்தி, பேதி போன்றவை ஏற்பட்டுள்ளது. இந்த அறிகுறிகளில் இரண்டுக்கு மேற்பட்டவையாக இருந்தால் அது பன்றிக் காய்ச்சலின் அறிகுறியாக இருக்கலாம்.
இருமல் தொடரும்; தொண்டை வலிக்கும்; மூச்சுவிடுவதில் சிரமம் இருக்கலாம். பசி எடுக்காது; சாப்பிட்டாலும் வாந்தி வரும். வயிற்றுப்போக்கு இருக்கும்; களைப்பு ஏற்படும். அதிக உடல் வெப்பம், தசை வலி, வேலை செய்ய முடியாத நிலை. அடிக்கடி கோபம், எரிச்சல், உளைச்சல் ஆகியன ஏற்படும். நீலம் மற்றும் சாம்பல் நிறமாகத் தோல் காட்சியளிக்கலாம். தோல் எரிச்சல் ஏற்படும்.
சளி பிடித்தால் ஏற்படும் பிரச்சினைகள், பன்றிக் காய்ச்சலில் விரைவாக ஏற்படும். சுமார் 2, 3 வாரங்கள் காய்ச்சல் இருந்திருந்தால் எப்படி இருக்குமோ அப்படி உணர்வார்கள். தசை வலி ஏற்படும். அவ்வப்போது உடல் சூடு அதிகமாகும், சில சமயம் குறையும்.
ஆனால் இந்த அறிகுறிகளை வைத்தே ஒருவருக்கு பன்றிக் காய்ச்சல் பரவி இருக்கும் என்பதை உறுதிபடுத்த முடியாது. மருத்துவமனைக்குச் சென்று முழுப் பரிசோதனை செய்த பின்னரே பன்றிக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
உடனடியாக செய்ய வேண்டியது என்ன?
நீங்கள் கடந்த 10 நாட்களுக்குள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்திருந்தாலோ, பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டாலோ உடனடியாக மருத்துவரை சந்தியுங்கள்.
சுய மருத்துவம்
சுயமாக மருந்தகத்திற்குச் சென்று ஆன்டி பயாடிக் மருந்துகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கவும். சாதாரண பாக்டீரியா தொற்றினால் ஏற்படும் சளி, காய்ச்சலுக்கு வேண்டுமானால் ஆன்டிபயாடிக் மருந்துகள் பயனளிக்கும். ஆனால் இதுபோன்ற தொற்று நோய்களுக்கு ஆன்டி பயாடிக் பயனிக்காது. நிலைமையை இன்னும் மோசமாக்கும்.
தடுப்பு மருந்து
இதுவரை பன்றிக் காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் பன்றிக் காய்ச்சலுக்கான மருந்துகள் இதுவரை இல்லை. அதற்கான சோதனைகள் துரிதமாக நடந்து வருகின்றன.
அதிக பாதிப்பு யாருக்கு
பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு மட்டுமே பன்றிக் காய்ச்சல் எளிதாக பரவ வாய்ப்புள்ளது. மேலும், நுரையீரல் நோய், ஆஸ்துமாவிற்கு கடந்த 3 ஆண்டுகளாக சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள்.இதய நோய், கல்லீரல் நோய், ஈரல் நோய் உடையவர்கள்.நீரிழிவு நோய் உள்ளவர்கள்கர்ப்பிணிப் பெண்கள்65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள்5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆகியோர் பன்றிக் காய்ச்சலால் அதிக பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ளவர்களாவர்.
எப்படி பரவுகிறது
பன்றிக் காய்ச்சல் கிருமி எளிதாக தொற்றும் இயல்புடைது. ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எளிதாக பரவுகிறது. பன்றிக் காய்ச்சல் நோய் தாக்கியவர்கள் இரும்பும் போது அல்லது தும்மும் போது அவர்கள் வாய் அல்லது மூக்கில் இருந்து வெளியேறும் சிறு துளியின் வழியாகவே இந்த கிருமிகள் வெளியே வருகின்றன.
ஒருவர் தும்மும் அல்லது இரும்பும் போது கையை வைத்து மறைக்காமல் இருந்தால் காற்று வழியாக அந்த கிருமிகள் அருகில் இருப்பவரை தாக்குகிறது. அல்லது அவர் கையை வைத்து வாயை மூடிக் கொண்டால் அவரது கையில் அந்த கிருமிகள் அமர்ந்து கொண்டு, அவர் அடுத்ததாக தொடும் பொருட்களில் எல்லாம் பரவுகிறது. அந்த பொருட்களை அடுத்ததாக யார் தொட்டாலும் அவர்களுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவுகிறது
தடுக்க முடியுமா
பன்றிக் காய்ச்சலைத் தடுக்க இன்புயன்சா ஆன்டிவைரல் மருந்து பயன்படும். இந்த மருந்தை பன்றிக் காய்ச்சல் பாதிக்காதவர்கள் பயன்படுத்தலாம். ஆனால், இந்த மருந்தை பயன்படுத்தினாலும், நம் பக்கத்தில் பன்றிக் காய்ச்சல் பாதித்தவர் இருக்கும்போது இந்த மருந்து 70 முதல் 90 விழுக்காடு அளவிற்கு மட்டுமே பயனளிக்கும்.
பன்றிக் காய்ச்சல் பரவலைத் தடுக்க
இரும்பும் போதும், தும்பும் போதும் பயன்படுத்தியதும் அப்புறுப்படுத்தும் காகிதத்தைக் கொண்டு வாயையும், மூக்கையும் மூடவும். பின்னர் உடனடியாக இந்த காகிதத்தை கவனமாக அப்புறப்படுத்தவும். ஒவ்வொரு முறையும் உங்கள் கைகளை சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு கழுவவும். அவ்வப்போது ரிமோட், கதவு பிடிகள் போன்ற அனைவரும் உபயோகிக்கும் பொருட்களை கிருமி நாசினிகள் கொண்டு சுத்தப்படுத்தவும். காய்ச்சல் அல்லது சளி இருக்கும் போது மற்றவர்களுடன் பழக வேண்டாம்.
அடிக்கடி சுத்தமான நீரை பருகுங்கள். உடலில் நீர்த்தன்மை இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். வெளியில் அதிக கூட்டம் இருக்கும் இடத்திற்குச் செல்லும் போது முகக் கவசம் அணிவது நல்லது. ( இது கொஞ்சம் கஷ்டம் தான்)
வீடுகளில் செய்ய வேண்டியவை
சோப்பும், தண்ணீரும் 30 விழுக்காடு பன்றிக் காய்ச்சல் பரவலைத் தடுக்கும். அவ்வப்போது கைகளை கழுவுங்கள்.
வெளியில் செல்லும் போது உங்கள் கண்கள், மூக்கு, வாய்ப் பகுதியைத் தொடுவதைத் தவிர்க்கவும்.சத்தான உணவுகளை உண்ண வேண்டும். கர்ப்பிணிப் பெண்களும், மருத்துவமனையில் பணிபுரிபவர்களும் அதிக சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். பசலைக் கீரை, உருளைக் கிழங்கு, பீன்ஸ், தானியங்கள், மாமிசம், பால், மீன் போன்றவற்றில் பி12 விட்டமின் உள்ளது. இது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும்.
பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டியவை
உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களை பள்ளிக்கு அனுமதிக்க வேண்டாம். குழந்தைகளை அவ்வப்போது கைகளைக் கழுவ வைக்க வேண்டும். ஒருவரை ஒருவர் நெருக்கமாக அமர வைக்கக் கூடாது. பயன்படுத்தி தூக்கி எறியும் காகிதங்களை வகுப்புகளில் அதிகமாக விநியோகிக்க வேண்டும்.
ஏதோ எனக்குத்தெரிந்த சிலவற்றை பதிந்துள்ளேன்.
இந்தப்பதிவின் நோக்கம் பன்றிக் காய்ச்சல் பீதியை ஏற்படுத்துவதில்லை, எச்சரிக்கையை ஏற்படுத்துவது மட்டுமே.
ஹேய் பன்றிக்காய்ச்சலே! எம் ஊரைவிட்டு, எம் நாட்டைவிட்டு, எம் உலகைவிட்டுப் பறக்கக் கடவாய்...
2 comments:
ஓகே நடக்கட்டும் தொடருங்கள் கணா, ஆனால் இந்த word verification வேணாம் எடுத்து விடுங்க. வாழ்த்துக்கள்.
a GUd POST FOR AWARENESS..
CONGRATS...GANS
Post a Comment