Thursday, September 3, 2009

சாதனைச் சந்திராயன் 1...

சந்திரனை ஆராய்வதற்காக இந்தியாவிலிருந்து நிலவுக்கு முதன்முதலாக இந்தியாவின் விண்வெளி நிறுவனமான இஸ்ரோ அனுப்பிய 'சந்திராயன் 1 ' விண்கலம் திடீரென செயலிழந்தது விஞ்ஞானிகளுக்கு மட்டுமல்லாது பலருக்கும் அதிர்ச்சியாக அமைந்தது. இரண்டுவருடம் செயற்படும் என எதிர்பார்த்த இந்த விண்கலம் பத்து மாதத்திலேயே செயலிழந்தது அதிர்ச்சியை தருவது நியாயம்தானே..

இருந்தாலும் இந்திய முன்னாள் அணு விஞ்ஞானியும் ஜனாதிபதியுமான அப்துல் கலாம் மற்றும் பல விஞ்ஞானிகள் இந்த 'சந்திராயன் 1' விண்கலத் திட்டம் வெற்றியளித்துள்ளதகக் கூறியுள்ளனர். இது அனுப்பப்பட்ட நோக்கத்தில் 90% பூர்த்தியாகியுள்ளதேனவும் அறிவித்துள்ளனர்.

நிலவின் மேற்பரப்பை 'சந்திராயன் 1'விண்கலம் எடுத்தனுப்பிய படங்களிலிருந்து பல்வேறு தகவல்கள் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அதில், அமெரிக்காவினால் அனுப்பப்பட்ட 'அப்பலோ 15' என்ற விண்கலம் நிலவைச் சென்றடைந்ததா என்பதில் இருந்துவந்த சந்தேகம் தற்போது தீர்ந்துள்ளது. 40 ஆண்டுகளுக்குமுன் நிலவில் அந்த விண்கலம் ஏற்படுத்திய கோடுகளைச் 'சந்திராயன் 1' விண்கலம் படம்பிடித்து அனுப்பியுள்ளது.

'சந்திராயன் 1' விண்கலத்தில் பொருத்தப்பட்டிருந்த அதி நவீன (ஹைபெர் ஸ்பெக்டல்)கேமரா மூலமாகக் பல்வேறு படங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதன் மூலமே 'அப்பலோ 15' நிலவில் இறங்கிய இடமும், அது நடந்தபோது ஏற்பட்ட அடையாளங்களும் மிகத் தெளிவாகத் தென்படுகின்றதாம்.

அதேபோல் விண்வெளிவீரர்கள் பயணம் செய்த தானியங்கி ரோபோக்கள் சென்ற பாதைகளும் படம்பிடித்து அனுப்பப்பட்டுள்ளன. நிலவின் மேட்பரப்பிலுள்ள கருப்பு நிறத் தூசிகள் உள்ளன. அதில் இந்தப்பாதைகள் தெளிவாகத் தெரிகின்றன.

எனினும் நிலவில் கால் பதித்த நீல் ஆம்ஸ்ரோங் மற்றும் எட்வின் ஆல்ரின் ஆகியோரது கால்த் தடங்கள் மிகவும் மங்கலாகவே தென்படுகின்றன.
கனிய வழங்கள் குறித்து 'சந்திராயன் 1' அனுப்பிய படங்களிலிருந்து நிலவின் மேற்பரப்பில் கால்சியம் இருப்பது தெளிவாகியுள்ளது. குறைந்த அடர்த்தி மற்றும் இரும்புப் பற்றாக்குறை காரணமாக அவை மிதக்கின்றனவாம்.

நிலவில் இன்னும் எத்தனை எத்தனை மர்மங்கள் உள்ளனவோ?

No comments: