அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியின் அழைப்பின் பேரில், டெல்லி சென்று அவரைச் சந்தித்துப் பேசினார் விஜய்.இதனால் காங்கிரசில் விஜய் இணையக்கூடும் என்று பரவலாகப் பேசப்பட்டது.
இந்த விடயம் தொடர்பாக வணக்கம் தாயகத்தில் பேசிவிட்டு வந்து 10 மணிக்கு இணையத்தை தட்டிப் பார்த்தபோது ஐ...யோ.. என்றானது. இதை அறிந்த உங்களில் பலருக்கும் அப்பிடித்தான் இருந்திருக்கும்.
வெகு விரைவில் "சோனியா அம்மையார் தைரியமான பெண்மணி" அது இது என்று நம்ம தமிழ்த் தாத்தக்கணக்கா (மு.கருணாநிதி) விஜய் அனல் பறக்கப் பேசுவார் பாருங்க. காரணம் விரைவில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, பொதுச் செயலாளர் ராகுல் காந்தி ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளார் தளபதி.
இதுதொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும், இது காங்கிரஸ் மற்றும் விஜய் இருவருக்கும் பலம் சேர்ப்பதாக அமையும் என்றும் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் ( ஆமா வட்டம், சதுரம், செவ்வகம் எல்லாமேதான்) தெரிவிக்கின்றன.
விஜய்யின் இந்த வலையமைப்பை அப்படியே காங்கிரஸ் கட்சிக்கு, அதுவும் அவர் ஒரு கட்சியின் தலைவராக மாறும் முன்னரே இழுத்துப் போட்டுவிட வேண்டும் என விரும்பியே ராகுல் காந்தி, டெல்லிக்கு வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடந்தது என விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் கூறியுள்ளார். அதாவது தன்னை இளைஞர் காங்கிரஸ் தலைவராக நியமிக்க வேண்டும் என விஜய் கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு ராகுல் காந்தியும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தனிக்கட்சி தொடங்கிய விஜய்காந்த், சரத்குமார் எல்லோருமே அடுத்து என்னசெய்வது என்று தலையைச் சொறிந்துகொண்டு ததிங்கினதோம் போடுவதால், வேண்டாம் விஷப்பரீட்சை என்ற தனது நலம் விரும்பிகளின் ஆலோசனையின் பேரிலேயே இந்த முடிவுக்கு வந்துள்ளாராம் விஜய்.
மேலும் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளில், காங்கிரசில் மட்டுமே நடிகர்கள் யாரும் இல்லை என்பதால், அதில் இணைய அவர் முடிவெடுத்துள்ளாராம்.
2 comments:
ஏதாவது செய்ங்க.....
அண்ணா.... முதல் வருகை உங்கள் தளத்திற்குள்....
நம்ம தளபதியா இப்படி?.... நடக்கட்டும்... நடக்கட்டும்... அவர் அப்பா செல்லமாம் இல்லையா?...
Post a Comment