"விளையாட்டுன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதிலும் தடகள விளையாட்டுன்னா எனக்கு ரொம்பவே பிடிக்கும்..." என்ன இது வெற்றிவிழா பட வில்லன் வசனம் போல இருக்கு என்று யோசிக்கிறீங்களா?
Cricket பற்றியே எல்லோரும் பேசும் போது திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது உலக தடகளப் போட்டி. பல வீரர்கள், பல வேதனைகள், பல சாதனைகள் என நடந்து முடிந்த இப்போட்டிகளில் உலகமே வியந்து பேசியது ஒரே ஒரு வீரரைப்பற்றித்தான்.
"அடடே என்ன வேகமா ஓடுறார் " என்று மூக்கில் விரல் தடகளத்தில் போல்ட் பெற்ற தான் ஜமைக்காவின்
"ஒளிரும் தங்கப்பையன்" உசைன் st.லியோ போல்ட். (Usain st. Leo Bolt)
உசைன் st.லியோ போல்ட், 1986 ஆகஸ்ட் 21 ஆம் திகதி பிறந்த ஜமைக்க அதிவேக ஓட்டவீரர். அண்மையில் 100 m மற்றும் 200 m ஓட்டங்களிலும், தனது சக வீரர்களுடன் இணைந்து 4 X 100 m அஞ்சலோட்டத்திலும் பதக்கம் வென்றுள்ள இவர் 2008 ஒலிம்பிக்கில் இந்த பிரிவுகளிலும் சாதனைபுரிந்துள்ளார். போல்ட், 2008 கோடைகால ஒலிம்பிக்கில் மேற்குறிப்பிட்ட மூன்று ஓட்டப் பிரிவுகளிலும் தங்கம் வென்று 1984 ஆம் ஆண்டு கார்ல் லெவிஸ் ஏற்படுத்திய சாதனையை முறியடித்ததோடு ஒரே ஒலிம்பிக் போட்டியில் மூன்று உலக சாதனைகளை ஏற்படுத்திய முதல் வீரர் என்ற பெருமையையும் தனதாக்கிக்கொண்டார்.
2004 ஆம் ஆண்டு முழுநேர தடகள வீரரான போல்ட், ஆரம்பத்தில் சில போட்டிகளில் பங்குபட்ட முடியாது போனாலும் 2004 கோடைகால ஒலிம்பிக்கில் போட்டியிட்டார். 2008 மே மாதம் தனது முதல் 100 m பிரிவில் உலக சாதனையை 9.72 வினாடிகளில் ஓடி நிகழ்த்திக்காட்டிய போல்ட், 2008 Beijing ஒலிம்பிக் போட்டியில் 100 m மற்றும் 200 m ஓட்டப்பிரிவுகளில் மீண்டும் உலக சாதனையை நிலைநாட்டினார். 100 m பிரிவில் தனது 9.72 என்ற நேரப்பெருதியை முறியடித்து, 9.69 வினடிகளிலும் 200 m பிரிவில், 1996 அட்லாண்டா ஒலிம்பிக்கில் அமெரிக்காவின் Michael Johnson ஏற்படுத்திய 19.32 என்ற நேரப்பெருதியை முறியடித்து 19.30 வினாடிகளில் ஓடி உலக சாதனை புரிந்தார். Beijing ஒலிம்பிக் நிறைவடைந்தது சரியாக ஒரு வருடத்தின் பின் ஆகஸ்ட் 2009 இல் Berlin Germany இல் நடைபெற்ற உலக தடகளப் போட்டிகளில் 100 m மற்றும் 200 m பிரிவுகளில் முறையே 9.58 மற்றும் 19.19 வினாடிகளில் ஓடித் தனது சாதனையை தானே முறியடித்துள்ளார். Digital நேரக் கணிப்பு முறை ஆரம்பிக்கப்பட்டதன் பின்பு பதிவான ஆகக்குறைந்த நேரப்பெருதி, போல்ட் ஏற்படுத்திய 9.58 என்ற சாதனை நேரம்தான்.
தடகளத்தில் போல்ட் பெற்ற வெற்றிகளை கருத்திற்கொண்டு 2009 ஆம் ஆண்டின் உலகப் பிரசித்திபெற்ற விளையாட்டு வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அதுமட்டுமில்லாது "Lighting Bolt" (ஒளிரும் போல்ட்) எனவும் செல்லமாக அழைக்கப்படுகின்றார்.
உசைன் போல்ட் 1986 ஆகஸ்ட் 21 ஆம் திகதி ஜமைகாவிலுள்ள Trelawny என்னும் இடத்திலுள்ள Sherwood என்னும் சிறிய நகரத்தில் பிறந்தார்.
அப்பா - Wellesely Bolt
அம்மா - Jennifer Bolt
சகோதரர் - Sadeeki Bolt
சகோதரி - Sherine Bolt
இவரது பெற்றோர் அவர்களின் ஊரில் ஒரு பலசரக்குக் கடை நடத்தி வந்துள்ளனர். போல்ட் சிறுவயதில் தனது சகோதரருடன் தெருக்களில் cricket மற்றும் உதைப்பந்தாட்டம் விளையாடுவதில் அதிக ஆர்வம் காட்டியுள்ளார். சிறுவயதில் விளையாட்டைவிட வேறு எதைப்பற்றியும் சிந்திததில்லை என போல்ட் ஒரு பெட்டியிலே கூறியுள்ளார்.
அவர் ஆரம்பத்திலே கல்விகற்ற Waldensia Primary எனும் பாடசாலையிலேயே தனக்குள் மறைந்திருந்த ஓட்டத்திறமையை முதன்முதலில் வெளிப்படுத்தினார். தனது 12 ஆவது வயதில் 100 ம இல் பாடசாலையின் அதிவேக ஓட்டவீரராகத்திகழ்ந்தார் போல்ட்.
போல்ட் William Knibb ஞாபகார்த்த உயர் பாடசாலையில் கல்விகற்கும் காலத்தில் வேறு விளையாட்டுக்களிலும் அதிக ஆர்வம் காட்டினார். ஆனால் அவரின் cricket பயிற்சியாளர் அவரைத் தடகளத்தில் அதிக கவனம் செலுத்தினால் சிறந்த எதிர்காலம் உண்டு எனக்கூறி அதற்கு வழிநடத்தினார்.
போல்ட்டின் ஆரம்பகால தடகளப் பயிற்சியாளர்களாக இருந்தவர்கள் முன்னாள் ஒலிம்பிக் வீரர்களான Pablo McNeil மற்றும் Dwayane Barrett. பாடசாலை மட்டப்போட்டிகளில் போல்ட் திறமையை வெளிப்படுத்தினாலும் பயிற்சிகளில் போதிய அர்ப்பணிப்பின்மை மற்றும் இயற்கையாகவேயுள்ள நகைச்சுவையுணர்வு என்பன McNeil இற்கு வருத்தத்தையே ஏற்படுத்தியது.
2001 ஆம் ஆண்டு நடைபெற்ற கரிபியன் தீவுகளுக்கிடையேயான CARIFTA போட்டிகளில் 400 M மற்றும் 200 M பிரிவுகளில் போல்ட் வெள்ளிப் பதக்கத்தை பெற்றதுடன் 400 m பிரிவில் தன் சொந்த சிறந்த ஓட்டப்பெருதியைப் பெற்றார். அதே ஆண்டு Debrecen, Hungary இல் நடந்த IAAF உலக இளையோர் தடகளப் போட்டிகளில் முதன்முதலில் சர்வதேச ரீதியாகப் பங்குபற்றினார். ஆனால் அதில் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற முடியாதுபோனது. அப்போதும் அலட்சியமாகவே நடந்துகொண்டார்.
போல்ட்டின் நகைச்சுவைத் தன்மையால் ஒருமுறை போலீசிலும் மாட்டிக்கொண்டார். அதன் பின்பே அவர் தன்னை கொஞ்சம் சுதாகரித்துக்கொண்டு சர்வதேசப் போட்டிகளில் தனது திறமைகளை மிகவும் அபரிமிதமாக வெளிப்படுத்தினார்.
இதை அவதானித்த ஜமைக்காவின் முன்னாள் பிரதமர் P.J.Patterson அவர்கள் Kingstan சென்று பிரத்தியேகப் பயிற்சிபெற ஒழுங்கு செய்துகொடுத்தார்.
கடுமையான பயிற்சிகள் அர்ப்பணிப்புத்தன்மை என்பவற்றினால் போல்ட் தனது திறமையினை கொஞ்சம் கொஞ்சமாக மெருகூட்டி பல சர்வதேசப் போட்டிகளுக்குச் சென்று மிளிர ஆரம்பித்தார். 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற Athens ஒலிம்பிக் போட்டியில் கால் உபாதை காரணமாக முதற்ச்சுற்றிலேயே வெளியேறவேண்டியேற்பட்டது. அடுத்த ஒலிம்பிக்கிற்காகக் காத்திருந்த போல்ட் 2008 இல் சதனையாளரானார்.
2008 Beijing ஒலிம்பிக் போட்டியில் 100 m மற்றும் 200 m ஓட்டப்பிரிவுகளில் உலக சாதனையை நிலைநாட்டினார். 100 m பிரிவில் தனது 9.72 என்ற நேரப்பெருதியை முறியடித்து, 9.69 வினடிகளிலும் 200 m பிரிவில், 1996 அட்லாண்டா ஒலிம்பிக்கில் அமெரிக்காவின் Michael Johnson ஏற்படுத்திய 19.32 என்ற நேரப்பெருதியை முறியடித்து 19.30 வினாடிகளில் ஓடி உலக சாதனையை ஏற்படுத்தினார். தனது சக வீரர்களுடன் இணைந்து 4 X 100 m அஞ்சலோட்டத்திலும் 37.10 வினாடிகளில் ஓடி உலக சாதனையை ஏற்படுத்தி தங்கம் வென்று பதக்கங்களின் உறைவிடமானார்.
Berlin Germany இல் நடைபெற்ற உலக தடகளப் போட்டிகளில் 100 m மற்றும் 200 m பிரிவுகளில் முறையே 9.58 மற்றும் 19.19 வினாடிகளில் ஓடித் தனது சாதனையை தானே முறியடித்தார்.
போல்டிற்கு மிகவும் பிடித்த விஷயம் நடனமாடுவது. 2004 ஆம் ஆண்டு முதல் போல்ட் தனது சிறுவயது நண்பியான Mizicann Evans என்பவரை காதலித்துவருகிறார்.
போல்ட் ஓட்ட வீரராக வந்திராவிட்டால் cricket இல் வேகப்பந்து வீச்சாளராக வந்திருப்பாராம். அதுமட்டுமில்லை உசைன், பாகிஸ்தான் அணியின் Waqar Younis, இந்திய அணியின் Sachin Tendulkar, மேற்கிந்தியத் தீவுகளின் Chris Gayle மற்றும் ஆஸ்திரலியா அணியின் Matthew Hayden ஆகியோரின் விசிரியாவார். இவருக்கு உதைப்பந்தாட்டம் என்றாலும் அதிகம் பிடிக்கும். அதிலும் இவர் Manchester United பரம ரசிகர்.
காலத்திற்குக் காலம் சாதனை நாயகர்கள் உருவாகிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். "Lighting Bolt" இன் சாதனைப்பட்டியல் தொடரட்டும்.
வாழ்த்துக்கள் Bolt...