Monday, June 30, 2008

A.M.Raja's 79th B'day on July 1st



ஏ. எம். ராஜா தமிழ் திரையிசையின் முக்கியமான பாடகர்களில் ஒருவர். இயற்பெயர் மால மன்மதராஜு ராஜா 1929 ஜூலை ஒன்றாம் தேதி ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் ராமச்சந்திரபுரத்தில் பிறந்தார். மூன்றுவயதில் தந்தையை இழந்த ராஜாவின் குடும்பம் ரேணுகாபுரத்துக்குச் சென்று குடியேறியது. அங்கேயே உயர்நிலைப்பள்ளிவரை படித்த ராஜா கல்லூரிப்படிப்புக்காக சென்னைக்கு வந்தார். 1951ல் பச்சையப்பா கல்லுரியில் பிஏ (இளங்கலை) முடித்தார்.



கல்லூரியிலேயே புகழ்பெற்ற பாடகராக விளங்கிய ராஜா பல போட்டிகளில் வென்றார். அவரை அடையாளம் கண்ட எச்.எம்.வி நிறுவனம் இரண்டு தெலுங்கு மெல்லிசைப் பாடல்களைப் பாடுவதற்காக தேர்வுசெய்தது. ராஜாவே எழுதி இசையமைத்த பாடல்கள் அவை. அவற்றின் கருவியிசைப்பகுதிக¨ளை நடத்தி பதிவுசெய்ய இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் அவருக்கு உதவினார். இப்பாடல்கள் அகில இந்திய வானொலியில் புகழ்பெற்றன. ஒருநாள் பின்னிரவில் அவற்ரை கேட்க நேர்ந்த ஜெமினி எஸ் எஸ் வாசன் கவரப்பட்டு தன்னுடைய பலமொழிப்படமான 'சம்சார'த்தில் தலைப்புப் பாடலைப்பாடும்படி அழைத்தார். சம்சாரம் பெரும் வெற்றி பெற்று பின்பு இந்தியிலும் எடுக்கப்பட்டது. எல்லா மொழியிலும் அப்பாடலை அவரே பாடினார்.



1951ல் கே.வி .மகாதேவன் ஏ.எம்.ராஜாவை அவரது 'குமாரி ' என்ற படத்தில் 'அழியாத காதல் வாழ்வில்...என்ற பாடலை பாடும்படி அழைத்தார். அன்றுவரை கர்நாடக இசையின் பாணியில் பாடப்பட்ட திரைப்பாடல்களைக் கேட்டுப்பழகிய தென்னிந்திய இசை ரசிகர்களுக்கு ராஜா ஒரு புதிய சுவையை அளித்தார். வட இந்திய திரைப்பாடல்கள் மற்றும் கஸல் பாடல்களிலிருந்து அவரே தனக்கென உருவாக்கிக் கொண்ட பாணி அது. இந்தி பாடகர்களான மொகம்மத் ர•பி மற்றும் தலத் மெக்மூத் கியோரின் பாட்டுமுறைகளின் பல சிறப்பம்சங்களை எடுத்துக்கொண்டு அவர்களை போலிசெய்யமல் தன்னுடைய சுயமான பானியை உருவாக்கியவர் ஏ.எம்.ராஜா. மிக மென்மையாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் பாடும்முறை என்று அதைச் சொல்லலாம்.



துயரத்தையும் தாபத்தையும் தேக்கிய பாடல்களே ஏ.எம்.ராஜாவை தமிழில் நீங்காப்புகழ்பெறச்செய்தன. சிற்பி செதுக்காத பொற்சிலையே தென்றல் உறங்கியபோதும் போன்றவை உதாரணம். மேலை இசையின் சாயல்கொண்ட துள்ளலான டாத மனமும் டுதே, பாட்டுபாடவா பார்த்து பேச வா, ஓகோ எந்தன் பேபி போன்ற பாடல்களிலும்கூட ஒரு இனிமையான மென்மையைச் சேர்ப்பது அவரது குரல். மைனர் லை•ப் ரொம்ப ஜாலி போன்ற பாடலக்ளையும் அவர் தன் பாணியில் பாடியுள்ளார். முறையான கர்நாடக இசைப்பயிற்சி உள்ளவரென்பதனால் ஏ.எம்.ராஜா மரபானமுறையில் கர்நாடக ராகங்களுக்குள் அமைக்கப்பட்ட பாடல்களைக்கூட எந்தவிதமான முயற்சியும் தெரியாமல் சுருதித்தெளி¢வுடன் இயல்பாக பாடியுள்ளார். 'மீண்ட சொற்கம்' படத்தில் வரும் 'கலையே என் வாழ்கையின் ' வாகீச்வரி ராகத்தில் அமைந்த பாடல். 'தேன்நிலவு' படத்தில் வரும் காலையும் நீயே ஹம்சத்வனி ராகத்தில் அமைந்தது.



அதே இயல்புமாறாத துல்லியத்துடன் வேகமான தாளம் கொண்ட வாடிக்கை மறந்ததும் ஏனோ கண்மூடும் வேளையிலும் போன்ற பாடல்களையும் அவர் பாடியிருக்கிறார். மெல்லிய நடை கொண்ட நிலவும் மலரும் இதய வானின் உதய நிலவே கண்ணாலே நான் கண்ட கணமே போன்றவை அவரது குரலின் அழகை முழுக்க காட்டி நம் இழந்த வாழ்க்கையின் இனியதுயரங்களை தொட்டு மீட்டுபவை. தன் உணர்ச்சிகளை மென்மையாக பாடல்களில் ஏற்றுவதன் மூலம் ஏ.எம்.ராஜா மெட்டுக்கு அப்பால் சென்று பாடல்களுக்கு அளிக்கும் ஒரு தனித்துவம் உண்டு. மாசிலா உண்மைக்காதலே [ அலிபாபாவும் 40 திருடர்களும் ] கண்களின் வார்த்தைகள் புரியாதோ' [களத்தூர் கண்ணம்மா] போன்ற பாடல்களை உதாரணமாகக் காட்டலாம்.



ஐம்பது அறுபதுகளில் புகழின் உச்சியில் இருந்த நாட்களில் ஏ.எம்.ராஜா எம்.ஜி.ர், என்.டி ராமராவ், ஏ.நாகேஸ்வர ராவ், ஜெமினி கணேசன் ,சத்யன் பிரேம்நசீர் போன்ற பெரிய நட்சத்திரங்களுக்காக தொடர்ந்து பாடினார். பொதுவாக இளம் காதல் நாயகர்களான ஜெமினிகணேசன் ,பிரேம்நசீர் போன்றவர்களுக்கு அவரது குரல் பெரிதும் பொருந்தியது. அவருடைய பாடல்முறையில் திரைப்பாடல்களுக்கு ஓரளவு தேவை என்றே சொல்லக்கூடிய குரல்நடிப்பு அம்சம் அறவே இல்லை. எந்த நடிகருக்காகவும் அவர் தன் குரலையும் பாடல்முறையையும் மாற்றிக் கொள்ளவில்லை. அவரைப்பொறுத்தவரை பாடல் என்பது போலிசெய்வதோ , நடிப்பதோ அல்ல, இதயபூர்வமானது அது. பாடலை திரைபப்டத்தின் ஒரு பிரிக்கமுடியாத பகுதியாக எண்ணாமல்ந்திரைப்படத்துடன் ஒத்துப்போகும் ஒரு தனித்த கலையாக அவர் கண்டிருக்கவேண்டும். இந்த அம்சத்தால்தான் அவரது பாடல்கள் அவை இடம்பெற்ற படங்களின் காட்சிகளை மீறி மிகை நடிப்பு, மிகை உணர்ச்சிகளின் துணை இல்லாமலேயே, இன்றும் தனித்து நிற்கின்றன.



ஏ.எம்.ராஜா சில படங்களில் நடித்தும் இருக்கிறார். நாகேஸ்வர ராவ் நடித்து இருமொழிகளில் பெருவெற்றி பெற்ற தேவதாஸ் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அவர் வந்தார். பின்னர் இசைக்கலைஞனைப்பற்றிய படமான 'பக்க இந்தி அம்மாயி ' படத்தில் முதன்மை வேடத்தில் நடித்தார். அந்தப்படம் இந்தியில் பாடோசான் என்றபேரில் மறுக்கம் செய்யப்பட்டபோது அதில் கிஷோர் குமார் அந்த பாத்திரத்தில் பாடி நடித்தார். அந்தப்படம் சிலகாலம் கழித்து மீண்டும் 'பக்க இந்தி அம்மாயி ' என்ற பேரிலேயே தெலுங்கில் எடுக்கப்பட்டபோது ஏ.எம்.ராஜா நடித்த பாத்திரத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நடித்தார்.



1955ல் மகேஸ்வரி என்ற படத்தின் 'அழகு நிலவின் பாவனையிலேஎன்ற பாடலின் ஒத்திகையின்போது ஏ.எம்.ராஜா பாடகி ஜிக்கியிடம் தன் காதலை தெரிவித்தார். அது திருமணத்தில் முடிந்தது. ஜிக்கி ஏ.எம்.ராஜா தம்பதிக்கு று குழந்தைகள். அவர்களில் சந்திரசேகர் ஓரளவு தந்தையின் குரலையும் இசைத்திறனையும் கொண்டவர்.



ஏ.எம்.ராஜாவும் ஜிக்கியும்தான் பம்பாய்க்குச்சென்று இந்திப்படத்துக்காக பாடிய முதல் தென்னிந்தியப்பாடகர்கள். சங்கர் ஜெய்கிஷன் இசையில் ராஜ்கபூரின் 'ன்' படத்துக்காக. இதேபடத்தின் தெலுங்கு தமிழ் வடிவங்களுக்கான பாடல்களையும் அவர்கள் இருவரும்தான் பாடினர். பகுத் தின் ஹ¤யே போன்ற படங்களுக்கும் அவர்கள் பாடினர். ராஜாவின் பாடுமுறையில் இருந்த ஒரு பொது இந்திய இயல்புக்கு இது சான்றாகும். கன்னடத்தில் 'அதி மதுர அனுராகா போன்ற புகழ்பெற்ற பாடல்களை ஏ.எம்.ராஜா பாடினார். சிங்களப்படத்தில்கூட அவர் பாடியிருகிறார்.



பட்டுபோல நம்மை வருடிச்செல்லும் ஏ.எம்.ராஜாவின் குரலும் பாணியும் மேலான இசை ஒருபோதும் உரத்ததல்ல என்று காட்டியபடியே உள்ளன. அவரது குரல் எந்தவிதமான முயற்சியும் தெரியாத அளவுக்கு இலகுவானது. அதே சமயம் எந்த உச்சத்துக்கும் ழத்துக்கும் சாதாரணமாக சென்றுவருமளவுக்கு திறன் கொண்டது. ஒருபோதும் சுருதி விலகாதது. தென்னிந்திய இசைநட்சத்திரங்களில் முற்றிலும் சுருதிசுத்தமான குரல் ஏ.எம்.ராஜாவுடையதுதான்.



இசையமைப்பாளராக அவரது முதல் படம் தெலுங்கில் 1958ல் வந்த சோபா. அது ஒரு பெரும் வெற்றிப்படம். 1960ல் வெளிவந்த பெல்லி காணுகா அவரை தெலுங்கின் நட்சத்திர இசையமைப்பாளராக க்கியது. 1959ல் வந்த 'கல்யாணப்பரிசு' இயக்குநர் ஸ்ரீதரின் முதல் படம். அக்காலத்து மாபெரும் வெற்றிப்படங்களில் ஒன்று அது. தமிழில் இசையமைப்பாளராக ஏ.எம்.ராஜாவுக்கும் அதுவே முதல் படம்.



ஏ.எம்.ராஜா ஒரு முழுமையான இசைக்கலைஞர். தென்னிந்திய இசையின் ஒரே வெற்றிகரமான 'இசையமைப்பாளர்-பாடகர்' அவர்தான். ஹேமந்த் குமாரை விட்டால் இந்தியிலும் அவருக்கு இணையான ஒரு இசையமைப்பாளர்-பாடகரைக் காணமுடியாது. ஏ.எம்.ராஜா இசையமைத்த பெரும்பாலான பாடல்கள் தூய இன்னிசைமெட்டு கொண்டவை, னால் அவையெல்லாம் பெரும்புகழ் பெற்று அவரை வெற்றிகரமான இசையமைப்பாளராக நிலைநிறுத்தின. உதாரணமாக டிப்பெருக்கு என்றபடத்தில் சுசீலா பாடிய 'காவேரி ஓரம் கவிசொன்ன காதல்..'என்ற பாடல். சுசீலாவின் உச்சத்திற்குபோகும் திறனுக்குப் பதிலாக ழத்திற்குச் [base] செல்லும் திறனை வெளிப்படுத்தும் இப்பாடலின் மெட்டு எத்தனை நுட்பமான திருப்பங்களும் வளைவுகளும் கொண்டு இறுதியில் உச்சத்துக்கு சென்று உலவுகிறது என்பதை கவனித்தால் இத்தகைய மெட்டை எளிதாக நம்மைக் கவரும் ஒரு பாடலாக அமைத்து, அதன் மெட்டுக்கும் பின்னணி இசைக்கும் இடையே துல்லியமான ஒருமையை உருவாக்கியுள்ள ஏ.எம்.ராஜா எத்தனை திறன் வாய்ந்த இசையமைப்பாளர் என்பது புரியும்.



தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று தென்மொழிகளிலும் உச்சப்புகழுடன் இருந்த பாடகர் ஏ.எம்.ராஜா மட்டுமே. 1952ல் தட்சணாமூர்த்தியின் இசையமைப்பில் 'லோகநீதி' என்ற படம் வழியாக மலையாளத்தில் ஏ.எம்.ராஜா நுழைந்தார். அவர் தெலுங்கராக இருந்ததால் சில மலையாளச்சொற்களை உச்சரிப்பதில் குளறுபடி இருந்தது. னாலும் மலையாளிகள் அவரை தங்கள் சொந்தப்பாடகராக ஏற்றுக் கொண்டனர். கேரளத்தின் முதல் 'சூப்பர் ஸ்டாரா'ன சத்யனின் குரலாக புகழ்பெற்ற ஏ.எம்.ராஜா அறுபதுகளில் கிட்டத்தட்ட ஒரு நட்சத்திரப் பாடகராகவே விளங்கினார்.



ராஜாவின் பல முக்கியமான பாடல்களுக்கு தேவராஜன் இசையமைத்தார். ராஜா பாடிய பெரியாறே பெரியாறே போன்றபாடல்கள் தமிழ்நாட்டிலும் அக்காலத்தில் புகழ்பெற்றிருந்தன. பொதுவாக எவரையும் புகழ்ந்து சொல்லாதவரும் குறைவாகப் பேசுபவருமான தேவராஜன் ராஜாவின் குரலின் இனிமையையும் சுருதி சுத்தத்தையும் மட்டுமில்லாது அவரது இனிய குணத்தையும், அர்ப்பணிப்பையும் புகழ்ந்து சொல்லியிருக்கிறார். வடக்கு கேரளத்தின் காதல்பாட்டுகளான 'மாப்பிளைப்பாட்டு'களின் சாயலில் அமைந்த பல பாடல்களை ராஜா பாடியிருக்கும் விதம் அந்தப் பண்பாட்டின் சாரத்தையே வெளிப்படுத்துவதாக அமைந்து இன்றும் மலையாளிகளின் நெஞ்சங்களில் வாழ்கிறது. உதாரணமாக 'உம்மா' படத்தில் வரும் 'பாலாணு தேனாணு ' என்றபாடலில் என் சைனபா ! என்ற அழைப்பில் ராஜா தன் குரல்மூலம் அளிக்கும் உணர்ச்சிகரமான நெகிழ்வு அதை மறக்கமுடியாத காதல்பாடலாக க்குகிறது. கேரளத்தின் என்றும் அழியாத இசைப்பாடல்களில் பல ஏ.எம்.ராஜாவின் குரலில் ஒலிப்பவையே. காச கங்கையுடெ கரையில்.. போன்றபாடல்களை மலையால திரையிசையின் 'கிளாசிக்'குகளாகவே சொல்லலாம்.



தெலுங்கில் ஏ.எம்.ராஜாவின் பெரும்பாலான பாடல்கள் சரித்திரம் படைத்த வெற்றிகள். 1959ல் அப்பு சேஸி பாப்பு கோடு படத்தில் இடம்பெற்ற 'மூகாவைனா எமி லே' [தமிழில் 'போதும் இந்த ஜாலமே' ]இன்றும் ந்திராவில் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல். 1954 'விப்ரநாராயணா' படத்தில் இடம்பெற்ற 'சூடுமடே செலியா' 'பாலிஞ்சர ரங்கா' , 1957ல் அக்கா செல்லுலு ப்டத்தில் இடம்பெற்ற 'அந்து மாமிடி போன்றபாடல்களை தெலுங்கு திரையிசை மறக்கவேயில்லை. தமிழில் நீங்காப் புகழ்பெற்ற 'மாசிலா உண்மைக்காதலே' தெலுங்கில் வந்த 'பிரியதமா மனசு மரேனா' என்ற பாடத்தான். [லிபாபா 40 தொங்கலு]. அலாதீன் அற்புத தீபம் படத்தில் இடம்பெற்ற 'அண்டால கொனெட்டிலோனா' [1957] 'அமர சந்தேசம் 'படத்தில் இடம்பெற்ற 'ஏதோ நவீன பாவம்' என அவரது அழியாப்பாடல்களின் பட்டியலை பெரிதும் நீட்டமுடியும்.



நடுவே திரைவாழ்க்கையில் ஏ.எம்.ராஜாவுக்கு ஓர் இடைவெளி விழுந்தது. தன் மெல்லிசைக்கச்சேரிகள் வழியாக அவர் வாழ்க்கையை நடத்தினார். பல வருடங்கள் கழித்து எழுபதுகளின் தொடக்கத்தில் இசையமைபபளர் வி.குமார் ஏ.எம்.ராஜாவை அவரே அமைத்துக்கொண்ட அஞ்ஞாதவாசத்திலிருந்து மீட்டு பாடவைத்தார். 'ரங்கராட்டினம்' படத்துக்காக ஏ.எம்.ராஜா பாடிய முத்தாரமே உன் ஊடல் என்னவோ? அன்று மிகப்பெரிய ஒருஅலையாக நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டது. 'புகுந்தவீடு' படத்துக்காக ராஜா பாடிய செந்தாமரையே செந்தேனிதழே... அடுத்த அலை. இரு பாடல்களுமே சங்கர் கணேஷ் இசையமைத்தவை. 1973ல் 'வீட்டுமாப்பிள்ளை' படத்தின்வழியாக இசையமைப்பாளராகவும் ஏ.எம்.ராஜா மறுவருகை புரிந்தார். அதில் வந்த 'ராசி நல்ல ராசி ஒரு வெற்றிப்பாடல்.1975ல் 'எனக்கொரு மகன் பிறப்பான்' படத்திற்காகவும் ஏ.எம்ராஜா இசையமைத்தார். இக்காலகட்டத்தில் 'தாய்க்கு ஒரு பிள்ளை', 'வீட்டுக்கு வந்த மருமகள்', 'பத்துமாத பந்தம்', 'அன்பு ரோஜா', 'இது இவர்களின் கதை' போன்ற பல படங்களுக்காக தொடர்ந்து பாடினார். 1970ல் ஏ.எம்.ராஜா மலையாளத்தில் 'அம்ம எந்ந ஸ்திரீ' படத்திற்கு இசையமைத்தார். ஜிக்கியும் எழுபதுகளில் ஒரு மீள்வரவை நிகழ்த்தினார். 1970ல் 'காதலெனும் காவியம்' முதல் 1993 ல் இளையராஜா- விஸ்வநாதன் இசையில் 'செந்தமிழ்பாட்டு' படத்தில் 'வண்னவண்ண மெட்டெடுத்து' வரை அந்த பயணம் நீண்டது.



ஏ.எம்.ராஜா தன் கடைசிநாள்வரை பாடகராக இயங்கிக்கொண்டுதான் இருந்தார். 1989 ஏப்ரல் எட்டாம்தேதி கன்யாகுமரி மாவட்டத்தில் கூட்டாலுமூடு என்ற ஊரில் உள்ள பகவதி கோயிலில் இசைநிகழ்ச்சி முடிந்து தன் குழுவினருடன் ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தார். உதவியாளனாக வந்த ஒரு புதிய பையன் ரயிலை தவறவிட்டுவிட்டான் என்று எண்ணி கவலைகொண்டு நாகர்கோயில் - நெல்லை நடுவே வள்ளியூர் என்ற ஊரில் ரயில் நிலையத்தில் இறங்கி தேடினார். ரயில் புறப்படவே ஓடிவந்து ஏறமுயன்றவர் கால்தவறி ரயிலின் அடியில் விழுந்து நசுங்கி உருக்குலைந்து இறந்தார்.

Sunday, June 29, 2008

"வாட்டர் புரூஃப்" கையடக்க கணினி அறிமுகம்


பிரபல மின்னணு பொருள் தயாரிப்பு நிறுவனமான பானாசோனிக், நீர்புகாத (வாட்டர் புரூஃப்) நவீன கையடக்க கணினியை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அறிமுகம் செய்துள்ளது.


Toughbook CF-U1 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கையடக்க கணினி (Handheld PC), 7 அங்குல அகலம், 6 அங்குல நீளம் மற்றும் 2 அங்குல விட்டம் மட்டுமே கொண்டுள்ளதால், மிகவும் சிறிதாக காட்சியளிக்கிறது.


நீர்புகாத இந்த கையடக்க கணினி, 1.2 மீட்டர் உயரத்தில் இருந்து தரையில் விழுந்தாலும் எந்த சேதமும் ஏற்படாத வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது.


இன்டெல் நிறுவனத்தின் ஏட்டம் (Atom) பிராசசரை உள்ளடக்கிய இந்த கையடக்க கணினி, வரும் ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு வர உள்ளது. இதன் அறிமுக விலை 2,499 டாலர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Thursday, June 26, 2008

உலகின் முதலாவது சுழலும் மாடிக்கட்டிடம்

உலகின் முதலாவது சுழலும் மாடிக் கட்டிடமொன்றை துபாயில் ஸ்தாபிப்பதற்கான திட்டம் கட்டிடக் கலைஞர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
420 மீற்றர் உயரமான இந்த 80 மாடிக் கட்டிடமானது நியூயோர்க்கைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் டேவிட் பிஷரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடத்தின் மாடிகளுக் கிடையில் சுழலும் இயந்திர சாத னங்கள் பொருத்தப்பட்டுள்ளதால், ஒவ்வொரு மாடியையும் விரும்பிய திசைக்கு திருப்ப முடியும் என டேவிட் பிஷர் கூறுகிறார்.


இந்தச் சுழலும் மாடியிலுள்ள ஒவ்வொரு குடியிருப்பு அலகும் ஒரு சதுர அடிக்கு 3000 டொலர் வீதம், 4 மில்லியன் டொலரிலிருந்து 40 மில்லியன் டொலர் வரையான விலைக்கு விற்பனையாகவுள் ளது. மேற்படி சுழலும் மாடிக் கட்டிடத்தை நிர்மாணிக்கும் பணிகள் 2010 ஆம் ஆண்டுக்குள் பூர்த்தி செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

ஷேக்ஸ்பியர் ஒரு பெண்!!!

புகழ் பெற்ற ஆங்கிலக் கவிஞரும், நாடக ஆசிரியருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் உண்மையில் ஒரு பெண் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது. அவர் யூத இனத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.


உலகப் புகழ் பெற்ற கவிஞர்களில் ஒருவர் ஷேக்ஸ்பியர். அவரது பல படைப்புகள் இன்றளவும் புகழ் பெற்றவை. ஹேம்லட், ஜூலியஸ் சீசர், கிங் லியர், மெகபத், ஆண்டனி அன்ட் கிளியோபாட்ரா, ஓதெல்லோ, ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட பல புகழ் பெற்ற நாடகங்களையும், சொன்னட்ஸ், வீனஸ் அன்ட் அடோனிஸ், தி ரேப் ஆஃப் லுக்ரீஸ், தி பீனிக்ஸ் அன்ட் தி டர்ட்டிள் உள்ளிட்ட பல கவிதைகளையும் வடித்தவர் ஷேக்ஸ்பியர்.


உலகெங்கும் ஷேக்ஸ்பியருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் விரவிக் கிடக்கிறார்கள். இந்த நிலையில் ஷேக்ஸ்பியர் குறித்த பரபரப்புத் தகவலை ஜான் ஹட்சன் என்ற ஆய்வாளர் வெளியிட்டுள்ளார்.


இவரது கூற்றுப்படி ஷேக்ஸ்பியர் உண்மையில் ஒரு பெண். யூத இனத்தைச் சேர்ந்தவர். ஷேக்ஸ்பியரின் உண்மையான பெயர் அமெலியா பஸனோ லேனியர் பஸனோ என்பதாகும். அமெலியா, 1611ம் ஆண்டு முதன் முதலில் எழுதிய கவிதை சால்வே டியூஸ் ரெஸ் ஜூடாரியம் என்பதாகும். ஒரு பெண்ணால் எழுதப்பட்டு, பதிப்பிக்கப்பட்ட உலகின் முதல் கவிதை இதுதான்.


அமெலியா இங்கிலாந்தில் வாழ்ந்தவர். இவரது படைப்புகளும், ஷேக்ஸ்பியரின் படைப்புகளும் ஒரே மாதிரி உள்ளன. மேலும் அமெலியா தனது படைப்புகளில் பயன்படுத்திய வார்த்தைகளும், கவிதை ஆக்கங்களும், ஷேக்ஸ்பியரின் கவிதைகளுடன் மிகவும் பொருந்தி வருகின்றன.


ஷேக்ஸ்பியரின் படைப்புகளையும், அமெலியாவின் படைப்புகளையும் பார்க்கும்போதும், அவர்களது ஸ்டைல் உள்ளிட்டவற்றை பார்க்கும்போதும், ஷேக்ஸ்பியரின் படைப்புகள் உண்மையில் அமெலியாவுடையது என்று கருத வேண்டியுள்ளது.


இது மிகப் பெரிய உண்மை. அமெலியாவின் படைப்புகளை ஷேக்ஸ்பியர் திருடவில்லை. மாறாக, ஷேக்ஸ்பியர் என்ற பெயரில் எழுதியவர் அமெலியாதான். அமெலியா வாழ்ந்த காலத்தில் பெண்கள் கவிதை உள்ளிட்டவற்றை படைக்க, வெளியிட அனுமதி கிடையாது. இதனால்தான் தனது படைப்புகள் வெளியுலகை எட்டிப் பார்க்க வேண்டும் என்பதற்காக ஷேக்ஸ்பியர் என்ற பெயரில் அமெலியா கவிதைகளை வெளியிட்டுள்ளார்.


அக்காலத்து இங்கிலாந்தில் பெண்கள் இலக்கிய உலகில் நுழையக் கூட அனுமதி கிடையாது. நாடகங்கள் மட்டுமல்ல கவிதை, கதை என எதையும் எழுத அவர்களுக்கு அனுமதி கிடையாது. இதனால்தான் ஷேக்ஸ்பியர் என்ற பெயரில் அமெலியா தனது படைப்புகளை வடித்துள்ளார்.


அமெலியாவின் திட்டம் என்னவென்றால், வில்லியம் ஷேக்ஸ்பியர் என்ற பெயரிலேயே தனது படைப்புகள் உலகை வலம் வரட்டும். காலத்தின் கோலமாக உண்மை வெளியே வரும்போது தன்னைப் பற்றி உலகம் தெரிந்து கொள்ளட்டும் என்பதுதான் என்கிறார் ஹட்சன்.


ஹட்சன் பல்வேறு பல்கலைக்கழகங்களிலிருந்து ஏராளமான பட்டங்களைப் பெற்றவர் ஆவார். ஷேக்ஸ்பியர் படைப்புகள் குறித்து விரிவான பல ஆய்வுகளை மேற்கொண்டவர். ஹட்சனின் இந்தக் கூற்று இலக்கிய உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

8.1 MEGA PIXELS CAMERA PHONE

செல்போன் தயாரிப்பில் சிறந்து விளங்கும் சோனி எரிக்ஸன் நிறுவனம் 8.1 மெகாபிக்சல் திறனுள்ள கேமராவை உள்ளடக்கிய புதிய செல்போனை அறிமுகப்படுத்தி உள்ளது. C905 Cyber-shot எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த செல்போன், சோனி அறிமுகப்படுத்தும் முதல் ஸ்லைடர் போன் (Cyber-shot வரிசையில்) என்ற பெருமையை பெற்றுள்ளது.

செனான் (Xenon) ப்ளாஷ், ஃபேஸ் டிடெக்சன், ஆட்டோ ஃபோகஸ், ஸ்மார்ட் கான்ட்ராஸ்ட் மற்றும் இமேஜ் ஸ்டெபிலைசர் வசதிகளை உள்ளடக்கிய இந்த செல்போனில் 2.4 அங்குல scratch-resistant வண்ணத்திரை உள்ளது.

2 ஜிபி மெமரி ஸ்டிக், யுஎச்பி அடாப்டர் மற்றும் ஜிபிஎஸ் வசதிகளுக்கு இதில் உள்ளது, இதன் சிறப்பம்சமாக கருதப்படுகிறது.

இதேபோல் S302 Snapshot என்ற மற்றொரு ரக கேமரா செல்போனில், 2 மெகாபிக்சல் கேமரா, வீடியோ பதிவு செய்வது உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இதன் உள்ளீட்டு நினைவகத் திறன் 20 எம்.பி. மெமரி கார்டும் பயன்படுத்த முடியும்.

இதுமட்டுமின்றி டார்ச் மற்றும் ரேடியோ வசதி உள்ள J132 மற்றும் K330 என்ற இரண்டு சாதாரண ரக விலை மலிவான செல்போனகளையும் சோனி அறிமுகப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Wednesday, June 25, 2008

HANUMAAN IS BACK


இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான மேகாலயாவில் (Meghalaya) Garo hills பகுதியில் ஒதுக்குப்புறமாக உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் சில இடங்களில், காட்டு மனிதன் (அனுமான் உருவ மனிதன்) உயிரி அவதானிக்கப்பட்டுள்ளதாக அதனை அவதானித்த பலரும் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

சுமார் 10 அடி (3 மீற்றர்கள்) உயரமுள்ள சுமார் 300 கிலோகிராம் எடையுள்ளதாக இருக்கலாம் என்று கருதப்படும் இந்த காட்டு மனிதன் உடல் முழுதும் உரோமத்தால் மூடப்பட்டு கறுப்பு அல்லது சாம்பல் நிறத்தில் இருப்பதுடன் தாவரபோசணையை உணவுப் பழக்கமாகக் கொண்டிருப்பதாக அவனை அவதானித்த மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இந்தக் காட்டு மனிதன் அல்லது அனுமான் உருவ மனிதன் சிறிய குழுவாக [இரண்டு வளர்ந்தவர்கள் - (ஆண் + பெண்) மற்றும் இரண்டு இளையவர்கள் அல்லது குழந்தைகள் கொண்ட குழுவாக நடமாடுவதும் அவதானிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்த விசேட உயிரி பற்றிய தகவல்களைத் திரட்டி வரும் ஆய்வாளர்கள் இதன் உரோமம் என்று கருதத்தக்க மாதிரியை சேகரித்திருப்பதுடன் காட்டுப் பகுதியில் இவற்றின் 46 சென்ரிமீற்றர்கள் நீளமுள்ள பாரிய பாதங்கள் பதிக்கப்பட்ட அடையாளங்கள் குறித்த தகவல்களையும் சேகரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இதுவரை இந்த உயிரிகளை நேரடியாக ஒளிப்பதிவு செய்யவோ அல்லது புகைப்படம் எடுக்கக் கூடிய வாய்ப்பையோ, ஆய்வாளர்களோ அல்லது இவற்றை அவதானித்த மக்களோ அவற்றைக் காணும் பொழுதுகளில் கொண்டிருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த உயிரியின் இருப்புப் பற்றிய நம்பகத்தன்மை இன்னும் பூரணப்படுத்தப்படவில்லை.

Kavignar Kannadasan's 81st B'day

வாழ்க்கைக் குறிப்பு

பிறப்பு - 24.6.1927, சிறுகூடல்பட்டி
பெற்றோர் - சாத்தப்பன், விசாலாட்சி
மரபு - தன வணிகர்இயற்
பெயர் - முத்தையா
உடன்பிறந்தோர் - எண்மர்
கல்வி - ஆரம்பக் கல்வி சிறுகூடல்பட்டியில்
உயர்நிலைப் பள்ளி - அமராவதி புதூர், எட்டாவது வரை
1943 - முதற் பணி - திருவொற்றியூர், அஜாக்ஸ கம்பெனி
1944 - இலக்கியப் பணி - திருமகள் ஆசிரியர்
1944 - முதற் கவிதை - முதற் கவிதை
1945/46 திரை ஒலி, மேதாவி ஆசிரியர்
1949 சண்டமாருதம் ஆசிரியர்
1949 திரைப்படத் துறை பயிற்சி
1949 -முதற் பாடல் - படம் கன்னியின் காதலி, பாடல் கலங்காதேதிருமனமே
1949 - அரசியல் - தி.மு.கழகம், ஆரம்ப கால உறுப்பினர்
1950 - திருமணங்கள் - பொன்னழகி, பார்வதி
1952-53 - முதற்காவியம் - மாங்கனி, டால்மியாபுரம் பெயர் மாற்றப் போராட்டத்தில் ஈடுபட்டுத் தண்டனைக் குள்ளாகிச் சிறையில் இருந்தபோது எழுதப்பட்டது
1952-53 - கதை வசனம் - இல்லற ஜோதி, சிறையில் இருந்தபோது
1954, - முதற் பத்திரிகை - தென்றல் கிழமை இதழ், தொடர்ந்து தென்றல் திரை சண்டமாருதம், மாதம் இருமுறை,
1956 முல்லை இலக்கிய மாத இதழ்
1957 - தேர்தல் - இரண்டாவது பொதுத் தேர்தலில் திருக்கோஷடியூர் தொகுதியில் தி.மு.கழகத்தின் சார்பில் போட்டியிட்டுத் தோல்வி
1957 - திரைப்படத் தயாரிப்பு - - மாலையிட்ட மங்கை
1958-59 - சிவகங்கைச்சீமை, கவலை இல்லாத மனிதன்
1960 - 61 - அரசியல் மாற்றம் - - தி.மு.கழகத்திலிருந்து விலகல், தென்றல் நாளிதழ் துவக்கம்புதிய கட்சி -தமிழ்த் தேசியக் கட்சி - சம்பத் தலைமையில் துவக்கம், தென்றல் திரை நாளிதழ் துவக்கம்,
1962-63இல் காங்கிரஸில் இணைப்புமீண்டும் திரைப்படம் - வானம்பாடி, இரத்தத் திலகம், கறுப்புப் பணம்
1964 - 66 - அகில இந்திய காங்கிரஸ செயற்குழு உறுப்பினர்
1968-1969 - கண்ணதாசன் மாத இதழ், கடிதம் நாளிதழ்
1970 - ரஷயப் பயணம், சிறந்த பாடலாசிரியர் விருது -மத்திய, மாநில அரசுகள்
1971, 1975 - மலேஷியா பயணம்1978 - அரசவைக் கவிஞர்
1979 - சாகித்ய அகாடமி பரிசு - சேரமான் காதலி
1979 - அண்ணாமலை அரசர் நினைவுப் பரிசு (சிறந்த கவிஞர்)
1981 - அமெரிக்கா பயணம் (டெட்ராய்ட் நகர் தமிழ் சங்க விழாஇறுதி நாட்கள் - உடல்நிலை காரணமாக 24.7.81 சிகாகோ நகர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு 17.10.81 சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு அமரநிலை எய்தினார். 20.10.81 அமெரிக்காவிலிருந்து பொன்னுடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் 22.10.81இல் எரியூட்டப்பட்டது.புனைபெயர்கள் - காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமிகுடும்பம் - இருமனைவியரும் ஒன்பது ஆண் மக்களும் ஐந்து பெண் மக்களும் உள்ளனர்.

அவள் ஒரு இந்துப் பெண் சிவப்புக்கல் முக்குத்தி ரத்த புஷபங்கள் சுவர்ணா சரஸவதி நடந்த கதை மிசா சுருதி சேராத ராகங்கள் முப்பது நாளும் பவுர்ணமி அரங்கமும் அந்தரங்கமும் ஆயிரம் தீவு அங்கயர்கண்ணி தெய்வத் திருமணங்கள் ஆயிரங்கால் மண்டபம் காதல் கொண்ட தென்னாடு அதைவிட ரகசியம் ஒரு கவிஞனின் கதை சிங்காரி பார்த்த சென்னை வேலங்காட்டியூர் விழா விளக்கு மட்டுமா சிவப்பு வனவாசம் அத்வைத ரகசியம் பிருந்தாவனம்


வாழ்க்கைச்சரிதம்

எனது வசந்த காலங்கள் எனது சுயசரிதம் வனவாசம்

கட்டுரைகள்

கடைசிப்பக்கம் போய் வருகிறேன் அந்தி, சந்தி, அர்த்தஜாமம் நான் பார்த்த அரசியல் எண்ணங்கள் தாயகங்கள் கட்டுரைகள் வாழ்க்கை என்னும் சோலையிலே குடும்பசுகம் ஞானாம்பிகா ராகமாலிகா இலக்கியத்தில் காதல் தோட்டத்து மலர்கள் இலக்கிய யுத்தங்கள் போய் வருகிறேன்

நாடகங்கள்

அனார்கலி சிவகங்கைச்சீமை ராஜ தண்டனை

கவிதை நூல்கள்

கண்ணதாசன் கவிதைகள் - 6 பாகங்களில்திரைப்படப் பாடல்கள் - 2 பாகங்களில்பாடிக்கொடுத்த மங்களங்கள்கவிதாஞ்சலிதாய்ப்பாவைஸ்ரீகிருஷண கவசம்அவளுக்கு ஒரு பாடல்சுருதி சேராத ராகங்கள்முற்றுப்பெறாத காவியங்கள்பஜகோவிந்தம்கிருஷண அந்தாதி, கிருஷண கானம்